• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /UPI கட்டணங்களால் Google Pay, Phonepe நிறுவனங்களுக்கு ஜாக்பாட்... ரூ.7,500 கோடி வருமானம்

UPI கட்டணங்களால் Google Pay, Phonepe நிறுவனங்களுக்கு ஜாக்பாட்... ரூ.7,500 கோடி வருமானம்

UPI MDR Charges: சில வணிகர் சங்கங்கள் UPI MDR கட்டண முறைக்கான நடவடிக்கையை எதிர்க்கின்றன. அதே வேளையில், இந்தக் கட்டண முறையினால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த தகவல்களும் வெளியாகின்றன. இந்த புதிய கட்டணம் கட்டணச் சேவை நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Written BySripriya Sambathkumar
Published: Sep 23, 2026, 09:15 AM IST|Updated: Sep 23, 2026, 09:19 AM IST
joinshare
UPI கட்டணங்களால் Google Pay, Phonepe நிறுவனங்களுக்கு ஜாக்பாட்... ரூ.7,500 கோடி வருமானம்
Image Credit: Representative / UPI MDR Charges

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

UPI MDR Charges: செப்டம்பர் 15 அன்று, UPI பரிவர்த்தனைகளுக்கு MDR (வணிகர் தள்ளுபடி விகிதம்) கட்டணத்தை விதிக்க அரசு முடிவு செய்தது; இந்த முடிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. UPI பரிவர்த்தனைகள் மீது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிமுறைகள் குறித்துச் சிறு வணிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) தெளிவுபடுத்தியுள்ளது. மொத்தப் பரிவர்த்தனைத் தொகை மீதும் GST விதிக்கப்படாது என்றும், MDR கட்டணத்தின் மீது மட்டுமே அது விதிக்கப்படும் என்றும் NPCI தெரிவித்துள்ளது.

சில வணிகர் சங்கங்கள் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றன. அதே வேளையில், இந்தக் கட்டண முறையினால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த தகவல்களும் வெளியாகின்றன. இந்த புதிய கட்டணம் கட்டணச் சேவை நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மார்ச் 2028-க்குள் இந்தக் கட்டணத்தின் மூலம் கட்டணச் சேவை செயலிகள் (payment apps) ஆண்டுக்கு 1.1 பில்லியன் டாலர் வரை கூடுதல் வருவாயை ஈட்டக்கூடும் என பங்குத் தரகு நிறுவனமான பெர்ன்ஸ்டீனின் (Bernstein) கணிபத்துள்ளது. தற்போதைய சந்தைப் பங்களிப்பின் அடிப்படையில் பார்த்தால், PhonePe மற்றும் Google Pay ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இதில் சுமார் 900 மில்லியன் டாலர் (தோராயமாக ₹7,500 கோடி) வருவாயைப் பெறக்கூடும் என கூறப்படுகின்றது.

மேலும் படிக்க | Post Office RD: மாதம் ரூ.4,000 டெபாசிட் செய்து லட்சங்களில் வருமானம் பெறுவது எப்படி?

PhonePe மற்றும் Google Pay-யின் ஆதிக்கம்

  • வால்மார்ட் (Walmart) ஆதரவு பெற்ற PhonePe மற்றும் Google Pay ஆகியவை UPI சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. 
  • கடந்த மாதத் தரவுகளின்படி, மொத்த UPI பரிவர்த்தனை மதிப்பில் சுமார் 80 சதவீதத்தை இவ்விரு நிறுவனங்களும் கையாண்டுள்ளன.
  • இந்தக் புதிய கட்டணம் நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாயை ஈட்டித் தருவதுடன், தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களை ஈர்த்தல் மற்றும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்குச் சேவையை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் அதிக முதலீடு செய்ய அவர்களுக்கு உதவும்.

அக்டோபர் 15 முதல் கட்டணம் அமல்

அரசின் முடிவின்படி, இந்தியாவில் ₹2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% வணிகர் கட்டணம் விதிக்கப்படும். இப்புதிய விதி அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ளது.

இது நடைமுறைக்கு வந்தால், கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு UPI-ல் வணிகர் கட்டணம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதாக அமையும். முன்னதாக, UPI பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடமிருந்து இத்தகைய கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.

மேலும் படிக்க | தங்கம் விற்பனை 15% திடீர் சரிவு! விலை மேலும் குறையுமா? Explained

வாடிக்கையாளர்கள் மீதான தாக்கம்

இதனால் வாடிக்கையாளர்கள், அதாவது பொதுமக்களுக்கு எந்த வித கூடுதல் செலவும் ஏற்படாது என அரசாங்கம் கூறினாலும், வணிகர்கள் இந்தக் கூடுதல் செலவுச் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக்கூடும் என்பது குறித்த கவலை எழுந்துள்ளது. இருப்பினும், அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் UPI-ஐ பெரிதும் சார்ந்திருக்கத் தொடங்கியுள்ளதால், அவர்கள் மீண்டும் பெருமளவில் ரொக்கப் பணப் பயன்பாட்டிற்குத் திரும்புவதற்கான வாய்ப்பு குறைவு என்றே சில்லறை விற்பனையாளர்களும் துறை சார்ந்த நிபுணர்களும் கருதுகின்றனர்.

ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

இதற்கிடையில், குறிப்பிட்ட சில UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏடிஎம்களில் (ATM) போதுமான அளவு ரொக்கம் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) நிதியமைச்சகமும் வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளன.

"குறிப்பிட்ட UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய 'மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்' (MDR) முறைக்கு மக்களும் வணிகர்களும் தங்களை மாற்றிக்கொள்ளும் காலகட்டத்தில், ஏடிஎம்கள் வாயிலாக ரொக்கப் பயன்பாடு தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும்," என்று அரசாங்கம் கருதுகிறது.

மேலும் படிக்க | இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! விலை உயரப் போகும் சமையல் எண்ணெய்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Personal Finance