இந்திய மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் யூபிஐ பேமெண்ட் மீதான கட்டணத்தை விதிக்கும் முறை தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு நடைமுறைக்கு வரும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த இந்திய வர்த்தகர்களும் இதுதொடர்பான தற்போதைய அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
ரூ. 2,000-க்கு அதிகமான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பரிவர்த்தனைகளுக்கான 'மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்' (MDR) கட்டணங்கள் குறித்த முடிவு, நவம்பர் 15-ஆம் தேதிக்குள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக 'ஜீ பிசினஸ்'ஊடகத்திடம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (NPCI), திருத்தப்பட்ட MDR கட்டமைப்பைச் செயல்படுத்துவதைத் தள்ளிவைத்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு முதலில் அக்டோபர் 15, 2026 அன்று நடைமுறைக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பண்டிகைக் காலம் மற்றும் தீபாவளியைக் கருத்தில் கொண்டே,