ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு குத்துச்சண்டை தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் அங்குஷ் பங்கால். ஹரியானாவில் உள்ள சுபாஷ் சந்திரா அறக்கட்டளையின் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அவர், 80 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 80 கிலோ எடைப் பிரிவில் அங்குஷ் பங்கல் தங்கப் பதக்கம் வென்று, தனது வளர்ந்து வரும் குத்துச்சண்டை வாழ்க்கையில் மற்றொரு முக்கிய சாதனையைப் படைத்துள்ளார். ஹரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இவர், இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் கிம் மின்சியோங்கை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்தார். ஹிசாரின் கங்வா கிராமத்தில் உள்ள குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் (சுபாஷ் சந்திரா