தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் இன்னோக். கப்பலில் வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள செல்வமாதா ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் கப்பல் வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்ற இன்னோக், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினார். ஊர் திரும்பிய அவருக்குத் தனது காதல் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மனைவியின் செல்போனை அவர் ஆய்வு செய்தபோது, செல்வமாதா ஆலயப் பாதிரியாருடன் அவர் நெருங்கிய உறவில் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மனைவியிடம் கேட்டபோது அவரும் அதனை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதனைத்