தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மக்கள் கொடுத்த சம்மட்டி அடி எனத் தவெக ஊடகப் பேச்சாளர் பொதிகை சாரதி தெரிவித்துள்ளார். நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "பெண்கள் மீது திமுக வைத்த அவதூறுகளுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வர நினைத்தால் களப்பணி ஆற்றிப் பாடம் கற்க வேண்டும். அவரைத் திமுக இயக்கிப் பேச வைக்கின்றனர். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி தவெக-வைத்தான் தங்களின் இயக்கமாகப் பார்ப்பார்கள். தவெக வேட்பாளர்கள் கட்சி தாவியவர்கள் என்ற விமர்சனங்களை நிராகரிக்கிறேன். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒரு எம்எல்ஏ கூட ஜெயிக்காமல் முதல்வரைத்