மீசைய முறுக்கு 2 படத்தை திருவிழா மாதிரி கொண்டாடுறாங்க: ஹிப் ஹாப் ஆதி நெகிழ்ச்சி
ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து, அனந்திதா சுந்தர் தயாரிப்பில் வெளியான 'மீசைய முறுக்கு 2' படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. சைத்ரா ஆர்ச்சர், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விழாவில் பேசிய ஹிப்ஹாப் ஆதி, "என் உணர்ச்சிகளைத் திரைப்படத்தின் மூலம் கடத்துகிறேன். கதையை விட ரசிகர்களுக்கு நேர்மறையான ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் அளிப்பதே என் இலக்கு. ஒரு படைப்பாளிக்கு முழு சுதந்திரம் கிடைப்பதே பெரிய ஆதரவு. எந்தவித தலையீடும் இன்றி என் கலையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. ரசிகர்கள் இ்ப்படத்தைத் திருவிழா போலக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது"