தமிழக தவெக அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த நகைகள் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு சர்ச்சைக்கு உட்படுத்தினர். தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் மூன்று சவரன் தங்கம் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அதிக நகைகள் அணிந்திருப்பது எப்படி என திமுக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, தன்னை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்தார். இச்சூழலில், ஏற்கெனவே ஊழல் புகார்களை மறுத்திருந்த அமைச்சர் கீர்த்தனா, தற்போது மீண்டும் ஒரு ஊழல் புகாரை அமைச்சர் கீர்த்தனா எதிர்கொண்டுள்ளார். சிவகாசி திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்காக ஒப்பந்ததாரரிடம் 3 கோடி ரூபாய் வரை