வேலூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு பிரியர்களைக் கவரும் வகையில் கூட்டுறவுத்துறை சார்பிலும் மற்றும் பல்வேறு தனியார் கடைகளிலும் 50% முதல் 90% வரை அதிரடி தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறைந்த விலையில் தரமான பட்டாசுகளை வாங்குவதற்காக வேலூர் மாவட்டம் முழுவதும் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.