தமிழகத்திற்கு வரும் தொழில் முதலீடுகளை, அண்டை மாநிலமான ஆந்திரா தட்டிப் பறிக்கிறதா? என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது. சமீபத்தில் அம்மாநிலத்தில் நடந்து முடிந்த கூட்டாண்மை மாநாட்டின்போது, தமிழகத்தில் இருந்து ரகசியத் தரவுகள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளே இதற்குக் காரணம். இதன் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் அம்மாநிலத்தின் முக்கிய நகரமான விசாகப்பட்டினத்தில் கூட்டாண்மை மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இம்மாநாட்டின்போது கிழக்காசிய நாடான தென்கொரியவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் 1,614 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த விவகாரம்தான், ஆந்திர அரசின் தொழில் ஈர்ப்பு நடவடிக்கைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், தென்கொரியாவைச் சேர்ந்த