நேபாள நாட்டிலுள்ள திபெத் - நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பெரும் பனிப்பாறை சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்களை சூறையாடியது. நேபாள நாடு இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். அதோடு 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இன்னும், 5,000-க்கும் அதிகமானோர் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், இந்தியாவிலிருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்ற 213 பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை. இதனிடையே, பெருவெள்ளம் ஏற்பட்டு 3 மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், காணாமல்