தமிழகத்தின் நீர் ஆதாரங்களாக விளங்கும் 90 அணைகளிலும் நீர் இருப்பு கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. நீர்வளத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 224.343 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணைகளில், தற்போது வெறும் 81.391 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. அதாவது, மொத்த கொள்ளளவில் 36.28 சதவீதம் மட்டுமே நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 82.78 சதவீதமாக இருந்த நீர் இருப்பு, தற்போது ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. மேலும், 39 அணைகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான நீரே உள்ளது. மூன்று அணைகள் மட்டுமே முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணையில் வெறும் 25.841 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. கர்நாடகா உரிய காவிரி