12 படித்தவர்களுக்கு NABFINS வேலை ரெடியா இருக்கு: தமிழ் தெரிந்தால் போதும்.... உடனே அப்ளை பண்ணுங்க
NABFINS Recruitment 2026: வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பை careers@nabfins.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு கல்வித்தகுதியை நிறைவு செய்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
NABFINS Recruitment 2026: NABFINS லிமிடெட் நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (CSO) பணிக்கான விண்ணப்பங்கள் வரவவேற்கப்படுகின்றன. NABFINS தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமாகும் . இந்நிறுவனம் சுய உதவிக் குழுக்கள் (SHGs), கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLGs) ஆகியவற்றின் மூலம் கிராமப்புற மக்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது.
NABFINS வாடிக்கையாளர் சேவை அதிகாரி (CSO) பணி நியமனம் 2026
வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பை careers@nabfins.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு கல்வித்தகுதியை நிறைவு செய்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 30 செப்டம்பர் 2026 ஆகும்.
NABFINS Recruitment 2026: முக்கிய அம்சங்கள்
| அம்சம் | விவரம் |
| நிறுவனம் | NABARD Financial Services Limited (NABFINS) |
| வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | Customer Service Officer |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | தமிழ்நாடு |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 30.09.2026 |
NABFINS கால்லியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செயல்மூறை, விண்ணப்பிகும் முறை ஆகிய விவரங்களை இங்கே காணலாம்.
1. வாடிக்கையாளர் சேவை அதிகாரி: Customer Service Officer (CSO) – Field Work
பதவி: வாடிக்கையாளர் சேவை அதிகாரி
காலிடங்கள்: பல
சம்பளம்: ரூ.20,000 = ரூ.30,000
மொழி: தாய்மொழி (ஊள்ளூர் மொழி) மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்
கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
அனுபவம்:
- புதியவர்கள் (Freshers) விண்ணப்பிக்கலாம்.
- 1–3 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கட்டாயத் தேவை: செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் சைக்கிள்
NABFINS Recruitment 2026: வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
NABFINS Recruitment 2026: தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள்.
மேலும் படிக்க | ECHS Recruitment 2026: 96 காலியிடங்கள், அக்டோபர் 4 விண்ணப்பிக்க கடைசி நாள்
NABFINS Recruitment 2026: விண்ணப்பிக்கும் முறை
- முதலில் NABFINS வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer) பணிக்கான தகுதி வரம்புகளைச் சரிபார்க்கவும்.
- கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்கள் அடங்கிய புதுப்பிக்கப்பட்ட சுயவிவரக் குறிப்பை (resume) தயார் செய்யவும்.
- அதில் உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.
- புதுப்பிக்கப்பட்ட சுயவிவரக் குறிப்பை மின்னஞ்சலுடன் இணைக்கவும்.
- 'Application for Customer Service Officer (CSO)' என்பது போன்ற தெளிவான தலைப்பைப் (subject line) பயன்படுத்தவும்.
- careers@nabfins.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.
- 30 செப்டம்பர் 2026 அல்லது அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்கும் செயல்முறையை நிறைவு செய்யவும்.