• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசு அப்டேட்..

ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசு அப்டேட்..

ஓமன் நாட்டில் பணிபுரிய ஒரு சூப்பர் வாய்ப்பு; இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா? இதோ முழு விவரம்!

Written ByYuvashree M
Published: Sep 17, 2026, 03:53 PM IST|Updated: Sep 17, 2026, 04:05 PM IST
joinshare
ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசு அப்டேட்..
Image Credit: Oman | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு அரசின், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான Overseas Manpower Corporation Limited (OMCL) மூலமாக, வெளிநாடுகளில் வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு பாதுகாபான மற்றும் சட்டரீதியான முறையில் வேலை வாங்கித்தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஓமன் நாட்டில் வேலை:

ஓமன் நாட்டில், பல்வேறு பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுவதாக, சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த செய்திக்குறிப்பில், ஓமன் நாட்டில்  பணிபுரிய Production (Exposure in Melting/Moulding/Process Control & CNC Operator), Finishing & Inspection (Exposure In Quality / Final Inspection), மற்றும் Maintenance (Exposure in Mechanical / Electrical Maintenance) பணிக்கு ஆண் பணியாளர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதில் சேர விருப்பம் இருப்பவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள் என்ன?

ஓமன் நாட்டில் பணிபுரிய (exposure in foundry area or Manufacturing Industries) Diploma (Background) or ITI (Background) தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22-35 வயதிற்குட்பட்ட Production (Exposure in Melting/Moulding/Process control) மற்றும் CNC Operator, Finishing & Inspection (Exposure in Quality / final inspection) மற்றும் Maintenance (Exposure In Mechanical/Electrical Maintenance) பணிக்கு ஆட்கள் தேவை.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை: 10th பாஸ் போதும்... விவரம் இதோ

சம்பளம் எவ்வளவு?

இந்த பணிக்கு, மாதம் குறைந்தபட்சமாக ரூ.44,000 முதல் ரூ.54,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு :

2 வருடம் பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண் பணியாளர்கள் தேவை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதர செலவுகள் விவரம்!

உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு உள்ளிட்டவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேலே குறிப்பிடப்பட்டீருக்கும் பணிக்கு செல்பவர்கள், விசா கிடைத்த பின்பு, இந்த நிறுவனத்திற்கு சேவைக்கட்டனமாக, ரூ.35,400 மட்டும் செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

மேற்குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (ஆண்கள் மட்டும்) ovemclnm@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களுடைய சுயவிவரம் அடங்கிய, விண்ணப்பப்படிவத்தையும், கல்வி, பணி அனுபவ சான்றிதழ்கள், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை வரும் 11.10.2026ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு..

மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் 044-22502267 மற்றும் வாட்ஸ் ஆப் எண் : 9566239685 உள்ளிட்டவை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. எப்படி டவுன்லோட் செய்யலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu