Kallakurichi Recruitment News: கள்ளக்குறிச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU Kallakurichi) 'இளநிலை உதவியாளர் மற்றும் ஆவண எழுத்தர்' (Junior Assistant Cum Record Clerk) மற்றும் 'அலுவலக உதவியாளர்' (Office Assistant) பணியிடங்களுக்கான 2026-ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு கீழ் குறிப்பிட்டுள்ள விவரப்படி தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக முறையில் ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பணியிடங்கள், கல்வித் தகுதி, அனுபவம், மாத ஊதியம் ஆகிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பதவி: இளநிலை உதவியாளர் மற்றும் ஆவண எழுத்தர்
பணியிடங்கள்: 01
வயது வரம்பு: 42-க்கு மிகாமல் இருக்க வேண்டும்
ஊதியம்: மாதம் ரூ.20,000
கல்வி தகுதி
பதவி: அலுவலக உதவியாளர்
பணியிடங்கள்: 01
வயது வரம்பு: 42-க்கு மிகாமல் இருக்க வேண்டும்
ஊதியம்: மாதம் ரூ.13,000
கல்வித் தகுதி
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியே விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி தகுதிக்கான அனைத்துச் சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றின் நகல்களுடன் 28.09.2026 அன்று மாலை 5.45 க்குள் வந்துசேர வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
6-வது தளம், அறை எண் 602
கள்ளக்குறிச்சி
தொலைபேசி எண்: 04151 225600, 63691 07620
மின்னஞ்சல் முகவரி: dcpukkr2025@gmail.com
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே காணலாம்.
விண்ணப்பங்களை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.