ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசு அப்டேட்..
ஓமன் நாட்டில் பணிபுரிய ஒரு சூப்பர் வாய்ப்பு; இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா? இதோ முழு விவரம்!
தமிழ்நாடு அரசின், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான Overseas Manpower Corporation Limited (OMCL) மூலமாக, வெளிநாடுகளில் வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு பாதுகாபான மற்றும் சட்டரீதியான முறையில் வேலை வாங்கித்தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஓமன் நாட்டில் வேலை:
ஓமன் நாட்டில், பல்வேறு பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுவதாக, சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த செய்திக்குறிப்பில், ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/Moulding/Process Control & CNC Operator), Finishing & Inspection (Exposure In Quality / Final Inspection), மற்றும் Maintenance (Exposure in Mechanical / Electrical Maintenance) பணிக்கு ஆண் பணியாளர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதில் சேர விருப்பம் இருப்பவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள் என்ன?
ஓமன் நாட்டில் பணிபுரிய (exposure in foundry area or Manufacturing Industries) Diploma (Background) or ITI (Background) தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22-35 வயதிற்குட்பட்ட Production (Exposure in Melting/Moulding/Process control) மற்றும் CNC Operator, Finishing & Inspection (Exposure in Quality / final inspection) மற்றும் Maintenance (Exposure In Mechanical/Electrical Maintenance) பணிக்கு ஆட்கள் தேவை.
சம்பளம் எவ்வளவு?
இந்த பணிக்கு, மாதம் குறைந்தபட்சமாக ரூ.44,000 முதல் ரூ.54,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு :
2 வருடம் பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண் பணியாளர்கள் தேவை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதர செலவுகள் விவரம்!
உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு உள்ளிட்டவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேலே குறிப்பிடப்பட்டீருக்கும் பணிக்கு செல்பவர்கள், விசா கிடைத்த பின்பு, இந்த நிறுவனத்திற்கு சேவைக்கட்டனமாக, ரூ.35,400 மட்டும் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேற்குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (ஆண்கள் மட்டும்) ovemclnm@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களுடைய சுயவிவரம் அடங்கிய, விண்ணப்பப்படிவத்தையும், கல்வி, பணி அனுபவ சான்றிதழ்கள், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை வரும் 11.10.2026ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு..
மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் 044-22502267 மற்றும் வாட்ஸ் ஆப் எண் : 9566239685 உள்ளிட்டவை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. எப்படி டவுன்லோட் செய்யலாம்?