கடலூர் இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலை: 8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை... அனைவரும் விண்ணப்பிக்கலாம்
Cuddalore District Recruitment News: கடலூர் இளைஞர் நீதிக்குழுமத்தில் கூடுதல் பணியிடங்களை (உதவியாளர் மற்றும் பெஞ்ச் கிளார்க். இளநிலை உதவியாளர் மற்றும் ரெக்கார்டு கிளார்க்) நிரப்புவதற்கான நடவடிக்கை ஒரு வருட கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
Cuddalore District Recruitment News: கடலூர் மாவட்டட்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதிக்குழுமத்தில் கூடுதல் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள நபர்கள் இதற்கு விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு
கடலூர் இளைஞர் நீதிக்குழுமத்தில் கூடுதல் பணியிடங்களை (உதவியாளர் மற்றும் பெஞ்ச் கிளார்க். இளநிலை உதவியாளர் மற்றும் ரெக்கார்டு கிளார்க்) நிரப்புவதற்கான நடவடிக்கை ஒரு வருட கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது. கல்வி தகுதி, விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் கடலூர் மாவட்ட இணையதள முகவரியில் (www.cuddalore.nic.in) கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை: யாரெல்லாம் அப்ளை செய்யலாம்?
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு: முக்கிய தகவல்கள்
நிரப்பப்படவுள்ள கூடுதல் பணியிடங்கள்:
1) உதவியாளர் மற்றும் பெஞ்ச் கிளார்க்: Assistant cum Bench Clerk
பதவி: உதவியாளர் மற்றும் பெஞ்ச் கிளார்க்
காலியிடங்கள்: 01
தொகுபூதியம்: ரூ.25,000
வயது வரம்பு: 18 முதல் 42 -க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி
- இந்திய ஒன்றியத்தில் உள்ள ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல், கலை, வணிகம், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் துறையில் 10+2+3 அல்லது 11+1+3 கல்வி முறையில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- உதவியாளர் பதவிக்கான நேரடி நியமனத்தின் போது, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்பட்ட 'அலுவலகத் தானியக்கத்தில் கணினி' (Computer on Office Automation) தகுதி அல்லது இந்திய ஒன்றியத்தில் உள்ள ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கணினியில் வேறு ஏதேனும் பட்டயப் படிப்பு/பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2) இளநிலை உதவியாளர் மற்றும் ரெக்கார்டு கிளார்க்: Junior Assistant cum Record Clerk
பதவி: இளநிலை உதவியாளர் மற்றும் ரெக்கார்டு கிளார்க்
காலியிடங்கள்: 01
தொகுபூதியம்: ரூ.20,000
வயது வரம்பு: 18 முதல் 42 -க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி:
- 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி
மேலும் படிக்க | ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசு அப்டேட்..
3) அலுவலக உதவியாளர்: Office Assistant
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01
தொகுபூதியம்: ரூ.13,000
வயது வரம்பு: 18 முதல் 42 -க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி:
- 8-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி
விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய குறிப்புகள்
- மேற்காணும் பணியிடங்களுக்கான விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
- விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து புகைபடத்துடன் (Passport size) பூர்த்தி செய்து 25.09.2026க்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்.312, இரண்டாவது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கடலூர்-607001
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை இங்கே காணலாம்.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. எப்படி டவுன்லோட் செய்யலாம்?