UIIC AO Recruitment 2026: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (United India Insurance Company Ltd - UIIC) நிறுவனம் நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் UIIC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான uiic.co.in மூலம் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் நிறுவனத்தில் 225 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
| அம்சம் | விவரம் |
| நிறுவனம் | யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (UIIC) |
| அறிவிக்கை எண் | HO:HRM:REC:AO:1:2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| பணி வகை | நிரந்தர வேலை |
| பதவி | Administrative Officers |
| காலியிடங்கள் | 225 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்ப செயல்முறை தொடங்கும் நாள் | 08.09.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 28.09.2026 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UIIC காலியிடங்களுக்கான பதிவு செயல்முறை செப்டம்பர் 8 அன்று தொடங்கி செப்டம்பர் 28, 2026 அன்று முடிவடையும். இதற்கான தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களைப் பற்றி இங்கே காணலாம்.
நிர்வாக அதிகாரி – ஜெனரலிஸ்ட் (Generalists):
நிர்வாக அதிகாரி – இந்தி அதிகாரிகள்:
தேர்வு செயல்முறையின் பின்வரும் இரு தேர்வுகள் அடங்கும்:
முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் விவரிப்புத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், இறுதித் தேர்வுக்கு முந்தைய கட்டமான நேர்காணலுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள்.
முதற்கட்டத் தேர்வு 100 மதிப்பெண்களைக் கொண்டது, இதில் 100 கேள்விகள் இடம்பெறும். இத்தேர்வு 1 மணிநேரம் நடைபெறும். வினாத்தாள் ஆங்கில மொழித் திறன், பகுத்தறியும் திறன் (Reasoning) மற்றும் எண் கணிதத் திறன் (Quantitative Aptitude) ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பகுதியிலும்/தேர்விலும் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண்களைப் பெற வேண்டும். அத்துடன், நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டுள்ள ஒட்டுமொத்தக் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்களையும் பெற வேண்டும்.