• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /செப். 30க்குள் சொத்து வரி கட்டணும்! வாட்ஸ் ஆப்பில் ஈசியா வரி கட்டுவது எப்படி?

செப். 30க்குள் சொத்து வரி கட்டணும்! வாட்ஸ் ஆப்பில் ஈசியா வரி கட்டுவது எப்படி?

மாநகராட்சி பகுதியில் இருக்கும் சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கான சிறப்பு வழிமுறைகளை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 26, 2026, 01:55 PM IST|Updated: Sep 26, 2026, 02:06 PM IST
joinshare
செப். 30க்குள் சொத்து வரி கட்டணும்! வாட்ஸ் ஆப்பில் ஈசியா வரி கட்டுவது எப்படி?
Image Credit: Property Tax Tamil | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, அரசு அலுவலகங்கள் உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை சார்ந்த பணியாளர்களின் தொழில் வரி உள்ளிட்டவற்றை மாநகராட்சிக்கு வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய வரிக்கு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. இதையடுத்து, வரி செலுத்துவோரின் சிரமங்களை குறைப்பதற்காக் சொத்து வரி, தொழில் வரி, நிறும வரி மற்று வரியற்ற இனங்கள் ஆகியவற்றிறான கட்டணங்களை செலுத்துவதற்கு ஏதுவான நடைமுறைகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கட்டணங்களை செலுத்த 26.9.2026 (இன்று) மற்றும் 27.06.3036 (நாளை) ஆகிய தேதிகளில், மண்டல அலுவலகங்கள் மற்றும் வருவாய்த்துறை தலைமையிடத்தில் பொது வசூல் மையம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அக்.11 முதல் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை.. எங்கெல்லாம் ரயில் நிற்கும்? கட்டணம் விவரம்

சொத்து மற்றும் தொழில் வரி:

பெருநகர் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998ன் பிரிவூ 117ன் படி, பணியாளர்கள் ஊதியத்திலிருந்து தொழில் வரியினை பிடித்தம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செல்வது அந்த நிறுவனங்களின் சட்டப்பூர்வ கடமையாகும். இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரியினை பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரி, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும்.

சொத்து வரிக்கு சிறப்பு மையம்:

வரும் 30ஆம் தேதிக்குள், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியினை, நிலுவையின்றி செலுத்த வேண்டும். அப்படி கட்ட தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள், 2023 விதி 268ன் படி, தனி வட்டி விதிக்கப்பட வேண்டும்.

எனவே, வரி செலுத்துபவர்களின் சிரமத்தினை குறைக்கும் விதமாக சொத்து வரி, தொழில் வரி, நிறும வறி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றிற்கான கட்டணங்களை செலுத்துவதற்கு ஏதுவாக சனி மற்றும் ஞாயிறுகளில் (26.09.2026 மற்றும் 27.09.2026) ஆகிய நாட்களில் மண்டல அலுவலகங்கள் மற்றும் ரிப்பன் மாளிகை தலைமியிடத்தில் இருக்கும் வருவாய்த்துறை பொது வசூல் மையம் செயல்படும். இதற்கு ஆங்கிலத்தில் (Common Collection Centre) என்று பெயர்.

வாட்ஸ் ஆப்பில் செலுத்துவது எப்படி?

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு, வரி செலுத்துவோர், சொத்து வரி மற்றும் தொழில் வரியினை வாட்ஸ் ஆப் மூலமாகவும் செலுத்தலாம். www.chennaicorporation.gov.in எனும் இணையதளம் மூலமாகவும், RTGS, NEFT மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட WhatsApp செயலி எண்ணான : 9445061913 மூலமாகவும் வரியினை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குரித்து மேலும் தொடர்ந்து கொள்ள, 044-2561 9305 இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | தலைமுடி வெட்டியது ஒரு பிரச்னையா? எனக்கு மட்டும் ஏன் இப்படி? வேதனையில் மேயர் பிரியா

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai