ஸ்ருதிஹாசன் வீட்டில் பேய்? தானாக நகர்ந்த அமானுஷ்ய பொம்மை..! திகில் சம்பவம்..
பிரபல நடிகையான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய வீட்டில் தான் அனுபவித்த அமானுஷ்ய அனுபவம் குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். இதுகுறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகில் பல லட்சம் ரசிகர் கூட்டத்தை கொண்டவர், கமல்ஹாசன். இவருடைய மூத்த மகளான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு, தன்னுடைய மும்பை வீட்டில் தனக்கு நேர்ந்த அமானுஷ்ய அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து முழுமையாக இங்கு தெரிந்து கொள்வோம்.
ஸ்ருதிஹாசன் பகிர்ந்த விஷயங்கள்..
நடிகை ஸ்ருதிஹாசன், அங்கத் பேடி தொகுத்து வழங்கி வரும் டபுள் டேட் எனும் நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது, தன் வாழ்க்கையில் நடந்த சில அமானுஷ்ய அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
இது பற்றி அவர் பேசுகையில், தன்னுடைய மும்பை இல்லத்தில் ‘ஃபியோனா’ எனும் பொம்மையை தான் பெயரிட்டு வைத்திருந்ததாகவும், அது ஒரு ஆளுயர பொம்மை என்றும் கூறியிருந்தார். இந்த பொம்மை, மர்மமான முறையில் தானாகவே இடம் மாறியதாக கூறிய அவர், எந்த காரணமும் இன்றி அந்த பொம்மை ஒரே இடத்தில் நிற்காமல் வெவ்வேறு நிலைகளில் திரும்பியிருந்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | ‘கில்லி’ விஜய் தங்கச்சிக்கு கல்யாணம்! வைரலாகும் போட்டோஸ்..யார் மாப்பிள்ளை?
தானாகவே நகர்ந்த பொம்மை..?
தன்னால் எப்போதும் இருக்கும் ஒரு இடத்தில், நெகடிவ் அல்லது அமைதியற்ற ஆற்றலை உணர முடியும் என்று கூறிய அவர், தன்னுடைய மும்பை வீட்டில் அத்தகைய உணர்வு ஏற்பட்டதாக விளக்கியிருந்தார். விசித்திர ஆற்றல்களை உணரும் திறன் தனக்கு எப்போதும் இருப்பதாக கூறிய அவர், இது தனக்கு எல்லா நேரங்களிலும் நடக்காது எனவும், ஆனால் சில சமயங்களில் நடக்கும் என்றும் கூறினார்.
தனக்கு சென்னை வீட்டில் சமநிலையான ஆற்றல் இருப்பதாக தெரிவித்த அவர், மும்பை வீட்டில் சந்தேகத்திற்கு இடமான ஏதோ ஒரு விஷயம் நடப்பதாக உணர்ந்ததாகவும், இறுதியில் அந்த பொம்மையை அனுமன் சாலிசா பாரயணம் செய்து, கையில் உப்பை வைத்து அப்புறப்படுத்திய பிறகு வீட்டை பூட்டியதாக தெரிவித்திருக்கிறார்.
தந்தை அப்படி..மகள் இப்படி..?
ஸ்ருதிஹாசனின் தந்தையான கமல்ஹாசன், மதம் மற்றும் பிற கடவுள் நம்பிக்கைகளை ஓப்பனாக எதிர்க்கும் நபராக இருக்கிறார். ஆனால், அவருடைய மகளான ஸ்ருதி, தன் வீட்டில் பேய் இருப்பதாக கூறி, அதை எப்படி துரத்தினேன் என்று ஒரு வழிமுறையை கூறுவதும் பார்க்க சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. இருப்பினும், அது ஸ்ருதியின் தனிப்பட்ட விருப்பம் என்பதால் இது குறித்து யாரும் பர்சனலாக கமெண்ட் செய்யவில்லை.
மேலும் படிக்க | பிக்பாஸ் முத்துக்குமரனுக்கு திருமணமா? வைரலாகும் வீடியோ..அப்போ அந்த பெண்ணின் கதி?