கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரிஷிகாந்த், சனத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் டோரதி. இந்த படம், சமூகத்திற்கு எதிரானது என்பது குறித்த கருத்துகள் இணையத்தில் வட்டமடிக்க தொடங்கி இருக்கின்றன. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
பீட்ஸா, ஜிகிர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ரெட்ரோ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் மக்களை ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ் தற்போது தன்னுடைய ‘டோரதி’ படம் மூலம் கடுமையான சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். இதற்கு காரணம், அந்த கதையில் அவர் LGBTQ சமூகத்தினர் குறித்து பேசியிருப்பதாகவும், இது சமூகத்திற்கு எதிரான கருத்து என்றும் பலர் பேசி வருகின்றனர்.
டோரதி படத்தில் கிர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் முக்கி வேடங்களில் நடித்துள்ளனர். இந்த கதை, கிராமப்புறத்தில் வாழும் ஒரு இளைஞன், தான் ஒரு ஆண் இல்லை என்று உணரும் போது அவனது சமூகமும், அவனை சுற்றி இருக்கும் சமுதாயமும் அவனை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்பதை ரொம்பவே துல்லியமான கதைக்களத்துடன் கூறியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படத்தை பொறுத்தவரை இது மதுரையில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடப்பது போன்ற கதையை கொண்டுள்ளது.
டோரதி படத்தின் ட்ரைலர் வெளியான போது அது கிராமத்து பின்னணியை கொண்ட கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எந்த இடத்தலும், இது திருநங்கை அல்லது LGBTQ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது காண்பிக்கப்படவில்லை. ப்ரமோஷனிலும் அதற்கான எந்த ஹிண்டும் கொடுக்கப்படவில்லை. ஒரு கொலை-த்ரல்லர் படத்தை எதிர்பார்த்து போனவர்களுக்கு, கதை வேறாக இருந்ததால் அதனை தியேட்டருக்கு சென்று பார்தத ஆடியன்ஸால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. ஆனால், இங்குதான் கார்த்திக் சுப்புராஜின் படத்தை பாராட்ட வேண்டும்.
இந்திய சமுதாயம் எப்படிப்பட்டது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட மக்கள் மத்தியில், படத்தில் இதுதான் முக்கியமான கதைக்களம் என்பதை அவர்கள் முன்கூட்டிய ப்ரமோஷனில் கூறியிருந்தார்கள் என்றால், அப்போதே இதற்கான எதிர்ப்பு கிளம்பி இருக்கும். அதே சமயத்தில், படத்தை யாரும் தியேட்டருக்கும் வந்து பார்த்திருக்க மாட்டார்கள். படத்தில் சர்ப்ரைஸ் எலிமெண்டாக இருக்க வேண்டிய விஷயம்தான், தற்போது மக்கள் பலரை ட்ரிகர் செய்திருக்கிறது.
இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் திருநங்கைகள் குறித்து வந்திருக்கின்றன. காஞ்சனா திரைப்படத்தில் சரத்குமார் நடித்தது திருநங்கை கதாப்பாத்திரம்தான், சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்தது திருநங்கை கதாப்பாத்திரம்தான், தர்மதுரை திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு திருநங்கை கதாப்பாத்திரத்திற்கு உதவி செய்வார். இதையெல்லாம் பாசிடிவாக ஏற்றுக்கொண்ட மக்கள், ஏன் டோரதி திரைப்படத்தில் திருநங்கையின் கதாப்பாத்திரம் இடம் பெற்றதை சர்ச்சையாக பார்க்கின்றனர் என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
அந்த படங்கள் அனைத்திலும், திருநங்கை என்பவர் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஒதுக்கி வைக்கப்படுபவராகவும், துன்புறுத்தல் செய்யப்படுபவராகவும் இருப்பர். அந்த இப்படங்களில், அவர்கள் அந்த துன்புறுத்தலில் இருந்து வெளியில் வந்து தங்கள் வழியே செல்வது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். கார்த்திக் சுப்புராஜும் டோரதி கதையில் கிட்டத்தட்ட அதையேதான் கூறியிருக்கிறார். ஆனால், கடைசியில் அந்த திருநங்கையாக இருக்கும் ஒருவர் தனக்கான துணையை தேடிக்கொள்வது போன்று க்ளைமேக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். அதைத்தான் சமூகத்தில் ‘ஆண்’ பெருமை பேசும் பலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “அது எப்படி, ஒரு திருநங்கையாக இருப்பவர் ஆண்-பெண் போல நார்மலான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்?” என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது. இவர்களின் பார்வையில், ஒரு திருநங்கை என்பவள் சமூகத்தால் ஒடுக்கப்பட்டவளாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் மனநிலையாக இருக்கிறது.
நாம் முதலில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தன்பாலின ஈர்ப்பாளர்களும், திருநங்கை-திருநர் மக்களும் ஒரே குடையின் கீழ் வருபவர்கள் கிடையாது. LGBTQ+ என்றால், Lesbian, Gay, Bisexual, Transgender, Queer மற்றும் பலர் என்று அர்த்தம். இதில், Transgender-திருநர் சமுதாய மக்களை தவிர அனைவரும் பாலின ஈர்ப்பை சேர்ந்தவர்கள். அதாவது, Lesbian, Gay என்பதை பாலின விருப்பம்-பாலின ஈர்ப்பை குறிக்கும். Transgender என்பது ஆண்-பெண் போல பாலினத்தை குறிக்கும்.
டோரதி திரைப்படத்தில், சனத்தின் கதாப்பாத்திரமான சுப்பு, ஆணாக இருந்து பெண்ணாக மாறும் திருநங்கை. அதே சமயத்தில் இவருடன் கடைசியில் ஜோடி சேரும் ரிஷிகாந்தின் கார்த்தி கதாப்பாத்திரம் ஒரு ஆண். திருநங்கை என்பவர், ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர், ஆனால் அவரை பெண்ணாக ஏற்றுக்கொள்ள இந்த சமுதாயம் மறுக்கிறது என்பதை கார்த்தி, திருநங்கையாக மாறிய பின்பு சுப்புவை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் இவர்கள் வைக்கும் விமர்சனத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
திருநங்கையாக, அதாவது பெண்ணாக மாறிய சுப்புவின் பாலினத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பலர், கார்த்தி அவருக்கு முத்தமிடும் காட்சியை வைத்து அவர்களை Gay என்று, அதாவது தன்பாலின ஈர்ப்பாளர் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், படத்தை பார்த்து, நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும், அவர் சிறுவயது முதல் தன்னுடன் ஓடியாடி விளையாடிய நண்பன் சுப்பு இப்போது ஒரு ஆண் இல்லை பெண் என்பதை அவர் புரிந்து கொண்டார் என்பது. “அது பொண்ணுனா..ஒரு பொண்ணை கூடவே வெச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமேன்னு எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு..” என்று அவர் டைலாக் பேசும் இடத்திலேயே அவருக்குள் அந்த acceptance வந்து விட்டது என்பது தெரிந்து விடும். எனவே, ஆணாக இருந்து பெண்ணாக மாறியிருக்கும் சுப்புவோ, சுப்புவை பெண்ணாக ஏற்றுக்கொண்டு அவர் மீது காதல் வந்ததை தெரிந்து கொள்ளும் கார்த்தியோ தன்பாலின ஈர்ப்பாளர்கள் கிடையாது என்பது தெளிவாகிறது.
படத்தின் ஒரு காட்சியில், கார்த்தி தன்னை திருநங்கை ஒருவர் தொட வரும் போது உடல் கூசுவது போல செய்வார். அதற்கு அந்த திருநங்கை, “நாங்கள் என்ன அவ்வளவு கேவலமானவர்களா, நாங்கள் தொட்டாலே அருவருப்பது போல செய்கிறாராயே, பத்து வருஷம்தான், பத்தே வருஷம்தான், எங்கள எங்களாகவே இந்த உலகம் ஏத்துக்கும். உங்களை போன்ற ஆட்களைத்தான் ஜந்து மாதிரி பார்ப்பாங்க” என்று கூறும் டைலாக்தான் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பலரும், “அப்பாே ஆம்பளைன்னாலே அசிங்கமா? திருநங்கையாக இருப்பதை நார்மலைஸ் பண்ணிடுவாங்களா?” என்று இணையத்தில் வீண் விவாதத்தை கிளப்பி இருக்கின்றனர்.
Athana Avanga normal people's ah sollave illa #Dorothy https://t.co/XiIkiWuVlj pic.twitter.com/KtGKXgMlP4
— (@Priyavijay22_) September 26, 2026
இதன் அர்த்தமே, “என்னைப்போன்ற திருநங்கைகள் இருப்பதும் இயற்கைதான் என்கிற புரிதல் மக்களுக்கு வந்து விடும். உன்னைப்போன்று திருநங்கைகள் என்பவர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள் என நினைப்பவர்களின் மனநிலையை அசிங்கமாக பார்ப்பார்கள்” என்பதே ஆகும்.
டோரதி திரைப்படத்தை பார்த்து, இந்த சமூகத்தில் இருக்கும் ‘ஆண்’கள் தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறி விடுவார்கள், இவர்களை அப்படி மாற்றக்கூடிய கார்ப்ரேட்கள்தான் இது போன்ற படங்களை எடுக்க தூண்டுகிறது என்ற டேட்டாவே இல்லாத கருத்துகளை பலரும் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, சாதிய படமாக எடுத்து தள்ளும் இயக்குநர் மோகன்.ஜி போன்றவர்கள் இந்த படத்தை எதிர்ப்பது என்பது சர்ப்ரைஸான விஷயம் கிடையாது. இவரைப்போன்ற மற்றும் தங்களின் Gender Identity அதாவது பாலின அடையாளம் குறித்த அவ்வளவு பெரிய Insecurityயுடன் இருக்கிறார்களா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி இருப்பவர்கள்தான் இது போன்ற கருத்துகளை பரப்பி வருகிறார்களோ? என்கிற கேள்வி எழாமல் இல்லை.