• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ஒரே நாளில் வெளியான டோரதி, மீசைய முறுக்கு 2, லெனின் பாண்டியன்..எது ஓகே?

ஒரே நாளில் வெளியான டோரதி, மீசைய முறுக்கு 2, லெனின் பாண்டியன்..எது ஓகே?

செப்டம்பர் 25ஆம் தேதியான நேற்று ஒரே நாளில் மூன்று படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இதையடுத்து இந்த படங்களில் எது மக்களுக்கு பிடித்துள்ளது, எது நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 26, 2026, 03:42 PM IST|Updated: Sep 26, 2026, 03:54 PM IST
joinshare
ஒரே நாளில் வெளியான டோரதி, மீசைய முறுக்கு 2, லெனின் பாண்டியன்..எது ஓகே?
Image Credit: Tamil Movies | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

3

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

4

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

5

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

செப்டம்பர் மாதம், நிறைய படங்கள் ரிலீஸான மாதமாக இருந்தது. குறிப்பாக, கடந்த 25ஆம் தேதி சில முக்கியமான படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்த படம் எது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

மீசைய முறுக்கு 2:

ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான், மீசைய முறுக்கு 2. இந்த படத்தில், அவர் கேத்திகா ஷர்மா, சைத்ரா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். யோகி பாபு காமெடி கதாப்பாத்திரத்தில் வருகிறார். இப்படம் குறித்து அனைவருக்கும் அதிக அளவில் எதிர்ப்பார்ப்பு எழுந்தது. காரணம், இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றி. அதே அளவிற்கு அதன் இரண்டாம் பாகத்திற்கும் இருக்கிறதா?

இந்த படத்தில் ஹிப் ஹப் ஆதி, மூன்று தலைமுறையிலும் இசை எப்படி இருந்தது என்பது போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் கருணாஸ், பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

படத்தின் core ஐடியா நன்றாக இருந்தாலும் பல இடங்களில் எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை என்றும், கதாப்பாத்திரங்களை இன்னும் நன்றாகவே எழுதியிருக்கலாம் என்றும் படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். இது, ஜென்z தலைமுறையினர் பலருக்கு பிடித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடி வரை வசூலித்திருக்கிறது.

லெனின் பாண்டியன்:

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படம்தான் லெனின் பாண்டியன். இதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெரன் தர்ஷன் கணேசன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதனை  D.D. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படம், மணல் கொள்ளையை மையமாகக் கொண்டு நம் மண்ணின் வாழ்வியலையும், எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

நிறைய படம் வெளியாகி  இருப்பதால், லெனின் பண்டியன் திரைப்படத்திற்கு ஓரளவிற்கு சிறிய அளவிலான ஸ்கிரீனிங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு சில ஷோக்கள் ஹவுஸ் புல்லாக செல்கின்றன.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு திரும்பிய ரோஜா, கங்கை அமரனின் முக்கிய கதாபாத்திரம் மக்களை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | 'Dorothy' என்றால் என்ன? கார்த்திக் சுப்புராஜ் பட பெயரின் அர்த்தம் இதுதான்!

டோரதி:

பிற இரண்டு படங்களை காட்டிலும், டோரதி திரைப்படம் குறித்துதான் இணையமே பேசி வருகிறது.  இதற்கு முதல் காரணம், இந்த படத்தின் கதை மற்றும் அக்கதை கூறவரும் கருத்து. இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் பிற்போக்குவாத சமூகத்திற்கு இடையே இப்படிப்பட்ட படங்களை எடுப்பது என்பது, அலாதி தைரியத்தின் அர்த்தமாக பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் சனத், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தில் திருநங்கைகளுக்கு ஆதரவான கருத்துகளும், அவர்களை சமூகம் எப்படி 90களில் பார்த்தது என்பது குறித்தும் காண்பித்திருந்தனர்.

கூடவே, சாதிய பாகுபாடுகள், பாலின பாகுபாடு என அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசி இருக்கின்றனர். இதனால், இப்படம் சிலரை ட்ரிகர் செய்து, எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளன. இருப்பினும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ராஜ் மோகனில் இருந்து, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் வரை பலருக்கும் பிடித்துள்ளது. இப்படம் ரிலீஸான முதல் நாளில் சுமார் ரூ.90 லட்சம் வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Explained : LGBTQ உறவை நார்மலைஸ் செய்வதா? டோரதி படம் சொல்ல வருவது என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema