• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே : விஜய் சேதுபதி வாய்ஸ் கன்ஃபார்ம்? மகன் கொடுத்த ரிப்ளை.!

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே : விஜய் சேதுபதி வாய்ஸ் கன்ஃபார்ம்? மகன் கொடுத்த ரிப்ளை.!

இன்னும் சில நாட்களில் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படம் வெளியாக இருப்பதையொட்டி, அதில் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்விக்கு தற்போது ஒரு பதில் கிடைத்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 30, 2026, 16:18 IST|Updated: Sep 30, 2026, 16:26 IST
joinshare
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே : விஜய் சேதுபதி வாய்ஸ் கன்ஃபார்ம்? மகன் கொடுத்த ரிப்ளை.!
Image Credit: Avengers Endgame | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

2

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

3

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

4

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

5

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியாவில், லட்சக்கணக்கான மார்வல் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கான சிறப்பான ட்ரீட்டாக வெளியாக இருக்கிறது, அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே. இந்த படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிரிஸ் எவன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுப்பாரா? என்கிற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு சூர்யா சேதுபதி பதிலளித்திருக்கிறார்.

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே:

அவெஞ்சர்ஸ் டும்ஸ்டே திரைப்படம், வரும் டிசம்பர் 18ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிரது. இப்படம் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதனை மார்வல் ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மல்டிவர்ஸ் எனப்படும், பல பிரபஞ்சங்களின் அழிவின் மத்தியில், பல்வேறு உலகங்களை சேர்ந்த ஹீரோக்களை ஒருவருக்கொருவர் மோதும் சூழலை உருவாக்குகிறது.

விக்டர் வான் டூம் என்ற காதாப்பாத்திரத்தில்தான், ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கிறார். இவர் இதற்கு முன்னர், ஐயர்ன் மேன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுக்கிறாரா?

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருப்பவர், விஜய் சேதுபதி. இவர், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் ஐயர்ன் மேன்-ராபர்ட் டவுனி ஜூனியர் கதாப்பாத்தித்திற்கு வாய்ஸ் கொடுத்தார். இவர், தன்னுடைய பரிமாணத்திலேயே, சில டைலாக்குகளை பேசியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | “அடுத்து கெத்து தினேஷ் கல்யாணம்தான்” அவரது காதலி வெளியிட்ட போட்டோக்கள்!

சமீப காலமாக, “நீ எப்படியோ அங்கேயிருந்து தப்பிச்சிட்ட..ஆனா அது முழுக்க முழுக்க ஃப்ளூக்தான்” என்று அவர் பேசிய டைலாக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது, மீண்டும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்கோர் படம் ரீ-ரிலீஸ் ஆகியிருந்தது. அதில் எங்கு மீண்டும் விஜய் சேதுபதி வாய்ஸ் வந்து விடுமோ என அனைவரும் பயந்தனர். ஆனால், நல்ல வேளையாக எப்போதும் வாய்ஸ் கொடுக்கும் ரவி ஷங்கரின் வாய்ஸ்தான் வந்தது.

டூம்ஸ்டே திரைப்படம் வெளியாகப்போவதை அடுத்து, அந்த படத்தில் விஜய் சேதுபதிதான் டூம்ஸிற்கு வாய்ஸ் கொடுப்பதாக தகவல் பரவியது. இது குறித்த ஒப்பந்தத்தில் விஜய் சேதுபதி கையெழுத்து போட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி விளக்கம் அளித்திருக்கிறார்.

சூர்யா சேதுபதி கொடுத்த ரிப்ளை..

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, சில மாதங்களுக்கு முன்பு ஃபீனிக்ஸ் எனும் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இவர், சமீபத்தில் ஐயர்ன் மேன் gif-ஐ ஒரு போஸ்டில் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ரிப்ளை செய்த ஒருவர், thalaiva, Iron Man voice mattum venam என்று ரிப்ளை செய்திருந்தார். அதற்கு அவர், “Don't worry, I'll take care thala" என்று ரிப்ளை செய்திருக்கிறார். இதையடுத்து, ஒரு வழியாக அவர் இந்த படத்திற்கு வாய்ஸ் கொடுக்கப்போவதில்லை என்பதை ரசிகர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

Image

வாய்ஸ் கொடுத்தது பற்றி விஜய் சேதுபதி என்ன சொன்னார்?

நடிகர் விஜய் சேதுபதி, தான் ஐயர்ன் மேன் வாய்ஸ் கொடுத்த போது, அதற்காக நிறைய வெறுப்பை சம்பாதித்ததாகவும், இதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதாவது, இதற்கு பொருப்பாளரான ஒரு பெண் பெங்களூரில் இருந்து வந்ததாகவும், அவர்தான் டைம் இல்லை என்று கூறி தன்னை வாய்ஸ் கொடுக்க சொன்னதாகவும் கூறினார். அது இவ்வளவு பெரிதாக முடியும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். முதல் பாடமே அவருக்கு பெரும் பாடமாக இருந்ததால், அவர் மீண்டும் அதே தவறை செய்ய மாட்டார் என்று கணிக்கப்படுகிறது. இருப்பினும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | கார்த்திக் சுப்புராஜ் மனைவி யார் தெரியுமா? கணவரின் எல்லா படத்திலும் நடித்திருப்பார்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema