SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil Nadu Live News : தவெக செல்லும் அதிமுக எம்எல்ஏக்கள், செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி, நவராத்தி விழா - இன்றைய அப்டேட்ஸ்

Tamil Nadu Live Updates: அதிமுக எம்எல்ஏக்கள் மேலும் 15 பேர் தவெகவுக்கு வர உள்ளனர் என அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி, நவராத்தி விழா லேட்டஸ்ட் நியூஸ் என்பது உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 13, 2026, 09:47 AM IST | Updated: Oct 13, 2026, 11:52 AM IST
Join

Tamil Nadu Live Updates : அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி, அதிமுக எம்எல்ஏக்கள் மேலும் 15 பேர் தவெகவுக்கு வர உள்ளதாக கூறியுள்ளார், நவராத்தி விழா தொடங்கியுள்ளது, தமிழ்நாட்டுக்கு முழுநேர ஆளுநராக அர்லேக்கர் நியமனம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

13 Oct 2026, 11:51 AM

Tamil Nadu Live News : கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக பார்ப்போம். (மேலும் படிக்க)

13 Oct 2026, 11:22 AM

Tamil Nadu Live News : உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 13)காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

13 Oct 2026, 11:21 AM

Tamil Nadu Live News : அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் வெளியில் வர தயார்

அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் வெளியில் வர தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனால், அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இன்னும் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. (மேலும் படிக்க)
 

13 Oct 2026, 11:02 AM

நெசவாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி-சேலைகளைத் தயாரிக்கும் நெசவாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் எம்.விஜய் பாலாஜி திங்கள்கிழமை தெரிவித்தார்... (மேலும் படிக்க)

13 Oct 2026, 9:53 AM

ஒட்டுண்ணி காய்ச்சல் அறிகுறிகள் என்ன?

Scrub Typhus : தமிழ்நாட்டில் பரவும் ஒட்டுண்ணிக் காய்ச்சல் குறித்த அறிகுறிகள், தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை. (மேலும் படிக்க)
 

13 Oct 2026, 9:56 AM

IMF குட் நியூஸ்

ஜூலை மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்த இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை, 2026-27 நிதியாண்டிற்கு 7 சதவீதமாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்த்தியுள்ளது. "உள்நாட்டுத் தேவையின் உறுதித்தன்மை மற்றும் வலுவான சேவைத் துறை செயல்பாடுகளால் உந்தப்பட்ட, எதிர்பார்ப்பை விட அதிகமான வளர்ச்சி வேகம்" காரணமாக இந்தக் கணிப்பு திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)

13 Oct 2026, 9:51 AM

8வது ஊதியக் குழு

அரசால் அமைக்கப்பட்ட ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை ஆய்வு செய்து மாற்றங்களைப் பரிந்துரைக்கும். இது தொடர்பாக ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற தரப்பினர் தங்கள் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் இக்குழுவிடம் முன்வைத்து வருகின்றனர்... (மேலும் படிக்க)

13 Oct 2026, 9:49 AM

பெண்கள் தொழில் தொடங்க ரூ.3.5 லட்சம் மானியம்

Tamil Nadu Government Schemes: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசின் முக்கிய திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES