• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil Nadu News Live Today: வடகிழக்கு பருவமழை தொடக்கம், ஜெயிலர் 2 அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil Nadu News Live Today: வடகிழக்கு பருவமழை தொடக்கம், ஜெயிலர் 2 அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu News Live Today: வடகிழக்கு பருவமழை தொடக்கம், ஜெயிலர் 2 படம் ரிலீஸ் என்பது உள்ளிட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 15, 2026, 09:49 IST|Updated: Oct 15, 2026, 17:53 IST
joinshare
Tamil Nadu News Live Today: வடகிழக்கு பருவமழை தொடக்கம், ஜெயிலர் 2 அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: tamil nadu news live today
15 Oct 2026 17:52 IST
share

ஸ்டாலின் கொளத்தூர் தோல்வி - ”அன்றே எச்சரித்தேன்”.. திருமாவளவன்!

கொளத்தூர் தொகுதியில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், ஸ்டாலினிடம் தொகுதி மாறி போட்டியிடுமாறு எச்சரித்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

 

15 Oct 2026 17:51 IST

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அக்டோபர் 21 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

15 Oct 2026 13:29 IST

எலான் மஸ்குக்கு சுனில் மித்தல் பளிச் பதில்

இந்தியாவின் செயற்கைக்கோள் இணையச் சந்தையில் போட்டி தீவிரமடைந்து வருகிறது. எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' (Starlink) நிறுவனம் இந்தியச் சந்தையில் தனது சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டு முன்னேறி வருகிறது. அதே வேளையில், பார்தி என்டர்பிரைசஸின் (Bharti Enterprises) தலைவர் சுனில் பார்தி மித்தல், அனுமதி பெறுவதற்கான வரிசையில் தனது செயற்கைக்கோள் இணைப்பு வணிகம் ஸ்டார்லிங்கை விட முன்னிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார்... (மேலும் படிக்க)

15 Oct 2026 12:00 IST

BEL நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் வேலை

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் 'புராஜெக்ட் இன்ஜினியர்' (Project Engineer) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்... (மேலும் படிக்க)

15 Oct 2026 11:23 IST

காஞ்சிபுரம் ரூ.25 ஆயிரம் சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்புக்கு ரூ.25,000 வரை ஊதியம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். (மேலும் படிக்க)

15 Oct 2026 11:22 IST

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை:

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

15 Oct 2026 11:10 IST

தமிழ்நாட்டில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 15, வியாழக்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி, நான்கு மாவட்டங்களில் மிக கனமழையும், மேலும் 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)

15 Oct 2026 10:24 IST

ஓய்வூதிய விதிகளில் மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 'தேசிய சமூக உதவித் திட்டத்தை' (NSAP) 2026-27 முதல் 2030-31 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க புதன்கிழமையன்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு ரூ. 53,428 கோடியாக இருக்கும். புதிய விதிகளின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 79 வயதுக்குட்பட்டவராக இருந்தால் மாதம் ரூ. 375-ம், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் மாதம் ரூ. 625-ம் வழங்கப்படும்.... (மேலும் படிக்க)

15 Oct 2026 10:21 IST

தீபாவளி போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் தீபாவளி போனசுக்கான உத்தரவு முன்கூட்டியே, அதாவது 2025 செப்டம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு அக்டோபர் 10 அன்று வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான உத்தரவு எப்போது வெளியாகும் என்பது குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை... (மேலும் படிக்க)

15 Oct 2026 09:55 IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முக்கிய அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு அருமையான வாய்ப்பு. திருச்சி, இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

15 Oct 2026 09:53 IST

மாதம் ரூ.9000 - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9000 ஊக்கத்தொகை பெறும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

15 Oct 2026 09:50 IST

கூட்டுறவு லோன் சிறப்பு முகாம் : சொந்த தொழில் செய்ய சூப்பர் சான்ஸ்!

கூட்டுறவு வங்கி லோன் முகாம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொழில்களுக்கு லோன் வாங்கலாம்? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2026ல் அதிக வசூல் செய்த டாப் 6 இந்திய திரைப்படங்கள்! லிஸ்ட்ல ஒரே ஒரு தமிழ் படம்..

2026ல் அதிக வசூல் செய்த டாப் 6 இந்திய திரைப்படங்கள்! லிஸ்ட்ல ஒரே ஒரு தமிழ் படம்..

2

இலவச மென்பொருள் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

3

சென்னை: இந்த பகுதிகளில் நாளை (நவம்பர் 25) குடிநீர் விநியோகம் நிறுத்தம்... உங்க ஏரியாவில் தண்ணீர் வருமா?

4

8வது ஊதியக் குழு: இனி ஒவ்வொரு ஆண்டும் 6% ஊதிய உயர்வு? அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்

5

டெல்லி : அன்சால் ஏபிஐ பொதுக்குழு கூட்டம் தோல்வி! சட்ட விதிகளை மீறியதாக பங்குதாரர்கள் கடும் எதிர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu News Live Today: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரையில் நீடிக்கும் காற்று சுழற்சியால், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சீரான மழை நீடிக்கும். ஜெயிலர் 2 ரிலீஸ் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள், லேட்டஸ்ட் அப்டேட்டுகள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்