3 நாள் விடுமுறை... தென்மாவட்ட மக்களுக்கு சிறப்பு ரயில்கள் - முக்கிய அறிவிப்பு
Gandhi Jayanti Special Trains: காந்தி ஜெயந்தி (அக். 2) மற்றும் வார இறுதி நாட்கள் உள்பட தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
Gandhi Jayanti Special Trains, Southern Railway: மகாத்மா காந்தியின் பிறந்தநாளான நாளை (அக். 2) நாடு முழுவதும் 'காந்தி ஜெயந்தி' கொண்டாடப்படுகிறது. இதற்கு அரசு விடுமுறை ஆகும்.
எனவே, நாளை (வெள்ளி) மற்றும் வார இறுதி நாட்கள் என அடுத்த 3 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் சுற்றுலா மற்றும் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிடுவார்கள்.
அந்த வகையில், ரயில் நிலையங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டமும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | 8ம் வகுப்பு படித்தவரா? ரூ.58,000 வரை சம்பளம்.. தமிழக அரசின் சூப்பர் வேலை
தாம்பரம் - மானாமதுரை - தாம்பரம்
- காந்தி ஜெயந்தி உள்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - மானாமதுரை இடையே முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- இன்று மாலை 4.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் (ரயில் எண்: 06159) நாளை (அக். 2) அதிகாலை 1.30 மணிக்கு சென்றடையும்.
- அதேபோல், வரும் அக்டோபர் 4ஆம் தேதி (ஞாயிறு) மானாமதுரையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் MEMU சிறப்பு ரயில் (ரயில் எண்: 06160) அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
- தாம்பரம் - மானாமதுரை இடையே செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அறியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த MEMU சிறப்பு ரயில் நின்று செல்லும்.
தாம்பரம் - தென்காசி - தாம்பரம் சிறப்பு ரயில்
முன்னதாக தாம்பரம் - தென்காசி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
- தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் (ரயில் எண்: 06123) இன்று (அக். 1) இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் (அக். 2) மதியம் 12.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.
- செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரயில் (ரயில் எண்: 06124) வரும் அக்டோபர் 4ஆம் தேதி (ஞாயிறு) மாலை 5.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும். இது அடுத்த நாள் (திங்கள்) அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
- தாம்பரம் - செங்கோட்டை இடையே செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
நெல்லை - தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில்
திருநெல்வேலி - தாம்பரம் (ரயில் எண்: 06166) ஞாயிறு (அக். 4) இயக்கப்படுகிறது. அதேபோல், தாம்பரம் - திருநெல்வேலி (ரயில் எண்: 06165) திங்கள் (அக். 5) அன்று புறப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
மேலும் படிக்க | திருமணத்தின் மீது நம்பிக்கை இழக்கும் பெண்கள்... House Husband... ஐகோர்ட் சொன்ன ஐடியா