• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explainer: 'இனி போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்' இந்தியா-சீனா 'நண்பேன்டா' மொமெண்ட், உற்றுநோக்கும் உலகம்

Explainer: 'இனி போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்' இந்தியா-சீனா 'நண்பேன்டா' மொமெண்ட், உற்றுநோக்கும் உலகம்

BRICS Summit: புது டெல்லியில் நடந்த 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 12-13 தேதிகளில் சீன அதிபர் டெல்லி வந்தார். அந்த பயணம் மற்றும் பிரதமர் மோடியுடனான அவரது சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி விவரித்துள்ளார்.

Written BySripriya Sambathkumar
Published: Sep 15, 2026, 10:31 AM IST|Updated: Sep 15, 2026, 10:40 AM IST
joinshare
Explainer: 'இனி போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்' இந்தியா-சீனா 'நண்பேன்டா' மொமெண்ட், உற்றுநோக்கும் உலகம்
Image Credit: ANI / India China Relations after BRICS Summit

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

BRICS Summit: புது டெல்லியில் நடந்துமுடிந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பல வித நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றில் மிக முக்கிய ஒன்று பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இரு தரப்பு சந்திப்பு. இந்த சந்திப்பில் சீனாவும் இந்தியாவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்ற "மிக முக்கியமான ஒருமித்த கருத்தை" அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளதாக உயர்மட்ட சீன இராஜ்ஜீய அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்தார்.

சீன அதிபரின் இந்திய வருகை

புது டெல்லியில் நடந்த 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 12-13 தேதிகளில் சீன அதிபர் டெல்லி வந்தார். அந்த பயணம் மற்றும் பிரதமர் மோடியுடனான அவரது சந்திப்பு குறித்து விவரித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சீன-இந்திய உறவுகள் தொடர்பான மூலோபாய, நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் வெளிப்படையான மற்றும் ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டதாகக் கூறினார்.

சீனாவும் இந்தியாவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்பதே அவர்கள் எட்டிய மிக முக்கியமான ஒருமித்த கருத்து என்று வாங் ஞாயிற்றுக்கிழமையன்று சீன அதிகாரப்பூர்வ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சீனாவும் இந்தியாவும் ஒன்றையொன்று பலப்படுத்திக்கொள்ளவும், பரஸ்பரம் ஆதரவளிக்கவும், வெற்றியடைய உதவவும் மற்றும் பொதுவான வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் முடியும் என்று அதிபர் ஜி ஜின்பிங்க் கூறியதாக வாங் தெரிவித்தார். இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் பணியக உறுப்பினரும் ஆவார்.

எல்லைப் பகுதி பிரச்சனை

இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றம் இரு நாடுகளின் நட்புக்கு மிகப்பெரிய பாதகமாக இருந்து வருகிறது. அதை பற்றியும் இந்த இரு தரப்பு சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிம்மதியை கூட்டாகப் பேண இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும், பிரிக்ஸ் அமைப்பின் சுழற்சி முறைத் தலைமைப் பொறுப்பை வகிக்கும்போது இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆதரிக்கும் என்றும் வாங் கூறினார்.

மேலும் படிக்க | டெல்லியில் சொந்த வீடு கட்டப் போறீங்களா? இந்த விதிகளைத் தெரிஞ்சுக்கோங்க

சர்வதேச அளவில் கவனம்

மோடி-ஜி இடையிலான இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் பரவலான கவனத்தை ஈர்த்தது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா-சீனா நட்பின் தொடக்கம் சில நாடுகளுக்கு வியப்பை அளிப்பதாகவும் கூறப்படுகின்றது. சீன வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டதாவது:

இரு நாட்டுத் தலைவர்களின் மூலோபாய வழிகாட்டுதலின் கீழ், சீன-இந்திய உறவுகள் ஒரு தேக்க நிலையிலிருந்து படிப்படியாக மீண்டு, "மீண்டும் தொடங்கும்" (restart) நிலையிலிருந்து "புதியதொரு உயர் நிலையை" (renewed elevation) நோக்கி முன்னேறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான களங்கள் விரிவடைந்து வருகின்றன, வர்த்தக அளவு சாதனை அளவை எட்டியுள்ளது, மேலும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் மிகவும் துடிப்பானதாக வளர்ந்து வருகின்றன.

'குளோபல் சவுத்'-க்கு பலம் சேர்க்கும் இந்திய-சீன உறவுகள்

சீன-இந்திய உறவுகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி என்பது இரு நாடுகளையும் சேர்ந்த 280 கோடிக்கும் அதிகமான மக்களால் வரவேற்கப்படுவது மட்டுமல்லாமல், 'குளோபல் சவுத்' பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தூணாகவும் திகழ்கிறது என்று வாங் கூறினார்.

முக்கியமான மூன்று அம்சங்களில் இரு தரப்பினரும் உறுதியளித்ததாக வாங் தெரிவித்தார்:

  • அரசியல் ரீதியான பரஸ்பர நம்பிக்கையை மேலும் வளர்த்துக்கொள்ளுதல்,
  • கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளைச் சரியாகக் கையாளுதல்,
  • எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிம்மதியை கூட்டாக நிலைநாட்டுதல்.

சீனா மற்றும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதைகள் ஒன்றுக்கொன்று பகிரப்பட்ட வாய்ப்புகளைக் குறிக்கின்றன என்றும், சீன-இந்திய ஒத்துழைப்பின் தாக்கம் இருதரப்பு உறவுகளையும் தாண்டி, 'குளோபல் சவுத்' மற்றும் பரந்த உலகிற்கு ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்றும் வாங் குறிப்பிட்டார்.

இந்தியா-சீனா உறவு

இந்திய-சீன உறவின் சில முக்கிய அம்சங்களை வாங் விளக்கினார்:

கடினமான முயற்சிகள்: சீன-இந்திய உறவுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் மேம்பட்டதும் கடினமான முயற்சிகளின் மூலம் எட்டப்பட்டவை என்றும், இந்த முன்னேற்றம் போற்றப்பட வேண்டியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போட்டியாளர்கள் அல்ல கூட்டாளிகள்: இரு நாட்டு தலைவர்களிடையே எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா சீனாவுடன் இணைந்து செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இரு நாடுகளும் போட்டியாளர்களாக அல்லாமல் கூட்டாளிகளாகத் திகழ வேண்டும் என்றும், இருதரப்பு உறவுகளைத் தேக்கமோ அல்லது பின்னடைவோ இன்றி சீராக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

எல்லைப் பிரச்சனை: எல்லைப் பிரச்சினையை இருதரப்பு உறவுகளின் பரந்த கண்ணோட்டத்தில் சரியான விதத்தில் அணுக வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையும் ஒத்துழைப்புமே முக்கியப் போக்குகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒன்றிணைந்த செயல்பாடு: பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் கூட்டு செழிப்புக்குத் தங்களின் பங்களிப்பை அளிக்கும் வகையில், இரு நாடுகளும் தங்கள் வளர்ச்சி மற்றும் தேசிய மறுமலர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | 30 வயதில் ராணுவத்திலிருந்து ரிட்டையர் ஆன குடியரசு தலைவரின் மெய்காப்பாளர்! காரணம் என்ன?

சீன பிரதமரின் வேண்டுகோள்

பிரதமர் மோடியுடனான சந்திப்பில், இடையூறுகளைக் கடக்க பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் எனும் அரசியல் முதிர்ச்சியைப் பயன்படுத்துமாறு சீனா மற்றும் இந்தியாவை சீன அதிகப்ர் ஜி ஜின்பிங்க் வலியுறுத்தினார்.

எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிம்மதியைப் பேண, இருதரப்பு உறவுகள் மற்றும் எல்லை விவகாரங்கள் ஆகிய இரு பாதைகளிலும் ஒரே நேரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், அவை ஒன்றுக்கொன்று வலுவூட்டும் வகையில் அமையவும் அவர் இரு தரப்பையும் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியின் சாதகமான பதில்

இந்தியா-சீனா உறவுகளை எப்போதும் ஒரு மூலோபாய மற்றும் நீண்டகால கண்ணோட்டத்துடனேயே இந்தியா அணுகி வருகிறது என்பதை உறுதிப்படுத்தி, பிரதமர் மோடி சாதகமான பதிலை அளித்தார் என்று வாங் தெரிவித்தார்.

சீனாவுக்கு எதிரியாக அல்லாமல் ஒரு கூட்டாளியாக இருக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், ஒரு நாட்டின் வளர்ச்சியை மற்ற நாடு ஒரு சவாலாகப் பார்க்காமல் ஒரு வாய்ப்பாகவே கருதுவதாகவும் பிரதமர் மோடி கூறியதாக சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

சீனாவுடனான உறவில் இந்தியாவின் அணுகுமுறை மூன்றாம் தரப்பினரின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டது என்றும், தனது மண்ணில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த சக்தியையும் இந்தியா அனுமதிக்காது என்றும் பிரதமர் மோடி கூறியதாக வாங் குறிப்பிட்டார்.

பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடனான உயர்மட்ட பரிமாற்றங்களைத் தொடரவும், மூலோபாயத் தொடர்புகளை ஆழப்படுத்தவும், மக்கள் இடையிலான உறவுகளை விரிவுபடுத்தவும் இந்தியா உறுதியுடன் உள்ளது என்றும், இவை அனைத்தும் இருதரப்பு உறவுகளில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வாங் மேலும் கூறினார்.

முக்கிய சில விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்படவும் இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக வாங் கூறினார். அவற்றில் சில:

  • பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிப்பதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது, 
  • ஐக்கிய நாடுகள் சபை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஜி20 (G20) உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, 
  • 'குளோபல் சவுத்' (Global South) எனப்படும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பில் ஒத்துழைப்பை முன்னெடுப்பது, 
  • பல துருவ உலக ஒழுங்கை ஊக்குவிப்பது மற்றும் 
  • உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக ஒன்றிணைந்து செயல்படுவது

மேலும் படிக்க | பிரதமரை சந்தித்த பள்ளி நண்பர்... சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை - என்ன மேட்டர்?

Add Zee News as a Preferred Source
TAGS:
India