SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தீபாவளிக்கு முன் ஷாக்... LPG சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு - சென்னையில் எவ்வளவு?

நவம்பர் 1ஆம் தேதியான இன்று வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை நாடு முழுவதும் உயர்ந்துள்ளது. மெட்ரோ நகரங்களில் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Nov 01, 2026, 07:14 AM IST | Updated: Nov 01, 2026, 08:00 AM IST
Join

Commercial LPG Price Hike: தீபாவளிக்கு முன்னதாக சாமானிய மக்களுக்கும், வணிகர்களுக்கும் சற்று கவலையளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது. நவம்பர் 1ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

நவம்பர் 1ஆம் தேதியான இன்று 19 கிலோ சிலிண்டரின் விலை 10 ரூபாய் முதல் 11.50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஒவ்வொரு ஆங்கில மாதமும் 1ஆம் தேதி அன்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் எரிபொருட்களின் விலையை மாற்றமியமைக்கும். டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை 10 ரூபாய் உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | '2024 மக்களவை தேர்தல் சட்டவிரோதம்... தேர்தல் ஆணையமே சொல்கிறது' - ராகுல் காந்தி கூறுவது என்ன

சென்னையில் மட்டும் விலை 11.50 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.     இதனால், தள்ளுவண்டி உணவகங்கள், ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள், பேக்கரிகள், உணவு உற்பத்தி கூடங்கள் ஆகியவற்றில் இந்த விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தும்.

வணிக LPG சிலிண்டரின் விலை நிலவரம்

நகரம் இன்றைய விலை உயர்வுஇன்றைய விலை
டெல்லி ரூ.10  ரூ.2,820
மும்பை ரூ.10  ரூ.2,774.50
கொல்கத்தா ரூ.10  ரூ.2,964
சென்னை ரூ.11.50  ரூ.2,994.50

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அன்று டெல்லியில் அதிகபட்சமாக ரூ.62.50 உயர்ந்தது. தொடர்ந்து வணிக ரீதியான சிலிண்டர் விலை உயர்ந்து வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரூ.2,043.50 என்ற விலையில் விற்பனையான சிலிண்டர், தற்போது வரை ரூ.951 அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கிடையே இரண்டு மாதங்கள் ஓரளவு விலை குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை

பாமர மக்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதற்கு முன் கடந்த ஜூன் 7ஆம தேதி அன்று 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை 29 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. அதற்கு முன் மார்ச் 7ஆம் தேதி அன்று ரூ.60 அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேற்காசியாவில் நிலவும் பதற்றம் உள்பட உலகளவில் நிலவும் எரிபொருள் விலை உயர்வே, எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வுக்கும் காரணமாகும்.

மேலும் படிக்க | 'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

நகரம் விலை நிலவரம்
டெல்லி ரூ.942
கொல்கத்தா ரூ.968
மும்பை ரூ.941.50
சென்னை ரூ.957.50

கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களை தவிர்த்து பெரியளவில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. பிப்ரவரி மாதம் ரூ.868.50 என்ற விலையில் செனனையில் விற்பனையான வீட்டு உபயோக சிலிண்டர் தற்போது வரை 88.5 ரூபாய் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.107.76, டீசல் ரூ.99.55, CNG ரூ.99.50 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

மேலும் படிக்க | Explainer: புகை மண்டலமான டெல்லி, அரசின் அதிரடி ஆக்‌ஷன்!! WFH, கட்டுமானத் தடை... நவம்பரில் புதிய விதிகள்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES