SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Video | BRICS 2026: 'ஒரு போட்டோ ப்ளீஸ்..’ பிரதமர் மோடியுடன் போட்டோ எடுத்த வெளிநாட்டு அதிகாரிகளின் ஃபேன் மொமெண்ட்

BRICS 2026: சுவாரசியமான ஒரு வீடியோ பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. புது டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினர் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஒரு இயல்பான புகைப்பட நிகழ்வின் மையப்புள்ளியாக மாறினார்.

Written By Sripriya Sambathkumar
Published: Sep 12, 2026, 08:50 IST | Updated: Sep 12, 2026, 09:01 IST
Image Credit: @PTI_News / PM Modi at BRICS 2026
Join

BRICS 2026: இந்தியா, இன்றும், நாளையும் (செப்டம்பர் 12,13) 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடத்தவுள்ளது. இதில் பிரிக்ஸ் உறுப்பு மற்றும் கூட்டாளர் நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து பல்வேறு விவகாரங்கள் பற்றி கலந்தாலோசிக்கவுள்ளனர்.

பல நாட்டு தலைவர்களும், அரசாங்க அதிகாரிகளும் புது டெல்லியில் கூடியுள்ள நிலையில், இந்தியாவின் தலைநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகத் தலைவர்களின் வருகை மற்றும் பிற நிகழ்வுகளை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுதும் மக்கள் ஆர்வத்துடன் சர்ச் செய்ட்து பார்த்து வருகிறார்கள்.

இதற்கிடையில், சுவாரசியமான ஒரு வீடியோ பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. புது டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினர் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஒரு இயல்பான புகைப்பட நிகழ்வின் மையப்புள்ளியாக மாறினார். முன் ஏற்பாடுகளேதுமின்றி நடந்த இந்த போட்டோ ஷூட் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

இந்திய அரசு பகிர்ந்துகொண்ட காணொளியில், வெளிநாட்டு பிரதிநிதிகள் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அவரை நோக்கிச் செல்வதைக் காண முடிகிறது. "நாங்கள் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?" என்று பிரதிநிதிகளில் ஒருவர் கேட்கிறார்.

"கண்டிப்பாக" என்று பதிலளிக்கும் பிரதமர் மோடி, அந்தப் பிரதிநிதியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். அடுத்த சில கணங்களிலேயே, அவரைச் சுற்றியிருந்த மற்ற பிரதிநிதிகளும், "ப்ளீஸ், பிரதமர் மோடி அவர்களே..." என்று அழைப்பதைக் கேட்க முடிந்தது.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்தப் பிரதிநிதிகள் குழுவை நோக்கிச் செல்கிறார்.

பிரதிநிதிகள் ஒன்றுகூடியபோது, ​​ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர், பிரதமர் மோடியைச் சுற்றி அந்தக் குழுவினர் நிற்பதற்கான இடத்தை விட்டுக்கொடுக்கும் வகையில் சற்று விலகி நின்றபதையும் காணொலியில் காண முடிகின்றது.

புகைப்படம் எடுப்பதற்கான நிலையில் அனைவரும் சரியாக நின்றுகொள்ள வசதியாக, புகைப்படம் எடுப்பவரை பிரதமர் சற்று காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறார். பிறகு புகைப்படம் எடுக்கப்படுகிறது. புகைப்படம் எடுத்த நபர், "நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், பெண்களுக்கிடையில் அழகான ஒரு புகைப்படம்...." என்று கூறியபோது, ​​அந்த இயல்பான உரையாடல் ஒரு கலகலப்பான திருப்பத்தை எட்டியது.

அந்த கூற்று குழுவினரிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதற்கு பதிலளிக்கும் விதாமாக, அவர்கள், "நாங்கள் அனைவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்," என்று கூறினர். இயல்பான இந்த சுருக்கமான அழகான உரையாடல் நிறைவடைந்தபோது, ​​பிரதமர் மோடி அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேலும் படிக்க | Explained : 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங்! இனி என்ன ஆகும்?

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உயர்மட்ட இராஜ்ஜீய மற்றும் வர்த்தக ரீதியான நிகழ்வுகள் நிறைந்த ஒரு நாளில், இந்த இயல்பான உரையாடல் ஒரு கலகலப்பான தருணமாக அமைந்தது. பிரதமர் மோடி பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் உரையாற்றியதுடன், புதின் மற்றும் பெசெஷ்கியன் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.

மேலும் படிக்க | புதினுக்கு திருக்குறள் பரிசளிப்பு... உடனே பிரதமர் மோடி சொன்னது என்ன தெரியுமா?

பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026

செப்டம்பர் 12 சனிக்கிழமையன்று, பிரதமர் மோடி எத்தியோப்பியா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்புகளில், மாலை 5:45 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடைபெறவுள்ள சந்திப்பு மிக முக்கியமானதாக அமைகிறது.

போர் மற்றும் வர்த்தகத் தடைகளுக்கு மத்தியிலும், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடாப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த இந்தியா 'பிரிக்ஸ்' (BRICS) உச்சிமாநாட்டை ஒரு தளமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூழலில் இச்சந்திப்புகள் நடைபெறுகின்றன.

மேலும் படிக்க | Explainer: சீன அதிபரின் இந்திய வருகை.... BRICS உச்சிமாநாட்டையும் தாண்டி 4 காரணங்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES