SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

Punjab Assembly Election Updates: அடுத்தாண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், அங்கு ஆம் ஆத்மி கட்சி - பாஜக - காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தேர்தல் களம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Nov 25, 2026, 17:32 IST | Updated: Nov 25, 2026, 17:37 IST
Image Credit: AI Generated Image : ChatGPT
Join

Punjab Assembly Election 2027 Updates: அடுத்த 2027ஆம் ஆண்டு தேசியளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. 2027 மார்ச் மாதத்திற்குள் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். மே மாதத்திற்குள் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். டிசம்பர் மாதத்தில் குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்.

இதில் உத்தர பிரதேசத்தின் சட்டப்பேரவை அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறது. மூன்றாவது முறையாக பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற கேள்வியும் எழுகிறது. அதேநேரத்தில், மணிப்பூர், பஞ்சாப் தேர்தல்களும் தேசிய அளவில் அதிகம் கவனிக்கப்படும். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | உத்தர பிரதேசம்: பெண்களின் கணக்கில் ரூ.20,000? தேர்தலுக்கு முன் பாஜக மெகா பிளான்

தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் பாஜக

பாஜக அங்கு ஏற்கெனவே தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், 2017ஆம் ஆண்டுக்கு பின் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 2012 தேர்தலில் பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தது.

அதன்பின் 2017இல் காங்கிரஸ், 2022இல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. இதற்கிடையே 2020ஆம் ஆண்டில் விவசாயப் போராட்டத்தின் எதிரொலியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் வெளியேறியது. மீண்டும் தற்போது பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. இதனால், பாஜகவின் தேர்தல் வியூகமும் வலுபெற்றிருக்கிறது.

கூட்டணியை அமைக்குமா காங்கிரஸ்?

பாஜக ஒருபக்கம் தனது கூட்டணியை வலுப்படுத்தியிருக்கும் சூழலில்,  காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பர்கத் சிங், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை உறுதிப்படுத்தினார். இந்த கூட்டணி ஏற்பட சாத்தியம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் இந்த கூட்டணியை அதிகம் விரும்பினாலும், தொகுதி பங்கீடு உள்ளிட்ட சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இரு கட்சிகளின் பலம் மற்றும் பங்களிப்பை பொறுத்து தொகுதி பங்கீடு செய்யப்படும் பர்கத் சிங் மற்றும் பஜ்வா இருவரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | UP Elections 2027: தேர்தல் கூட்டணியில் விரிசலா? "நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல" -வெடித்த காங்கிரஸ் எம்.பி!

காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சிக்கல்கள்

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால் தேசிய அரசியலை தொடர்ந்து மாநில அளவிலும் கைக்கோர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணியை முறியடிக்க இதுவே ஏதுவான கூட்டணியாக காங்கிரஸ் பார்க்கிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்களில் பெரியளவில் ஜொலித்ததில்லை. களத்தில் அதன் பலமும் பெரிதாக நிரூபிக்கப்படவில்லை.

இருக் கட்சிகளுக்கும் தொகுதி பங்கீட்டில் பெரியளவில் சிக்கல் வர வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி தனது உட்கட்சி பூசல்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. மூத்த தலைவர்களுக்கும், அடுத்தக் கட்ட தலைவர்களுக்கும் சம அளவில் வாய்ப்பளிக்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு எழுந்துள்ளது.

மும்முனை போட்டி

பாஜக - சிரோமணி அகாலி தளம், காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி என பஞ்சாப் மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓரளவு எதிர்ப்பு நிலவுவதும் கவனிக்கத்தக்கது. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்ற என்ன வியூகத்தை அமைப்பார் என்ற எதிர்பார்ப்பும் தேசியளவில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தற்போது பஞ்சாபில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

மேலும் படிக்க | அனைத்து பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் கொடுப்பது கட்டாயம்! அரசு அதிரடி உத்தரவு..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES