• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /புதுச்சேரி
  • /11 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: புதுச்சேரி ஜிப்மர் சாதனை

11 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: புதுச்சேரி ஜிப்மர் சாதனை

Puducherry: இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சிறுமியின் தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.

Written BySripriya Sambathkumar
Published: Sep 22, 2026, 12:51 IST|Updated: Sep 22, 2026, 13:12 IST
joinshare
11 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: புதுச்சேரி ஜிப்மர் சாதனை
Image Credit: Social Media / Puducherry JIPMER Kidney Transplant

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

3

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

4

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Puducherry: புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜிப்மரின் குழந்தைகள் மருத்துவத்துறை முதல்முறையாக குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய மைல்கல் சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சையில் இருக்கும் குழந்தை

இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சிறுமியின் தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.

ஜிப்மர் செய்திக்குறிப்பு

இது தொடர்பாக ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஜிப்மர் ஏற்கனவே தனது மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தின் மூலம் இத்தகைய சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைத்து நோயாளிகளுக்கும் விரிவான மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதற்கான பராமரிப்பை வழங்குவதில் இந்த நிறுவனம் அனுபவம் பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த அறுவை சிகிச்சை ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. ஏனெனில், ஜிப்மரின் பல்வேறு சிறப்பு மருத்துவக் குழுக்களுடன் இணைந்து, குழந்தைகளுக்கான பிரத்யேகத் திட்டமாக இந்த அறுவை சிகிச்சையைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, செயல்படுத்தும் பணியில் குழந்தைகள் நல மருத்துவத் துறை (Department of Paediatrics) முன்னின்று செயல்பட்டது.

மேலும் படிக்க | புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க ஊசி போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!

ஜிப்மர் இயக்குனர் டாக்டர் விர் சிங் நேகி இது குறித்துக் கூறியதாவது:

"குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உயர் மட்ட மருத்துவ நிபுணத்துவம், துல்லியமான ஒருங்கிணைப்பு மற்றும் ஒவ்வொரு நிலையிலும் சிறப்புப் பராமரிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. அறுவை சிகிச்சை என்பது இந்தச் செயல்முறையின் ஒரு பகுதி மட்டுமே; நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துதல் (immunosuppression), நீர் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலை மேலாண்மை, ஊட்டச்சத்து, மயக்க மருந்து அளித்தல், தீவிர சிகிச்சைப் பிரிவு பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பு ஆகியவை வளரும் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப கவனமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இச்சிறுமியின் சிகிச்சையில் கிடைத்த வெற்றி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களின் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த குழுப்பணியை வெளிப்படுத்துகிறது"

மேலும் படிக்க | Explanation | புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வெல்லப்போவது யார்? போட்டி தீவிரம்!

இந்த அனுபவம் ஜிப்மரில் குழந்தைகளுக்கான நிலையான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தரும் என்றும், இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மேலும் பல குழந்தைகள் பொது சுகாதார அமைப்பிற்குள்ளேயே மேம்பட்ட மாற்று அறுவை சிகிச்சை சேவையைப் பெற இது வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஜிப்மரின் தகவலின்படி,

  • 'சர்வதேச குழந்தைகள் மாற்று அறுவை சிகிச்சை சங்கத்தின்' (International Paediatric Transplant Association) கூட்டுத் திட்டத்தின் கீழ், புது தில்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறுநீரகவியல் (Paediatric Nephrology) குழுவின் வழிகாட்டுதல் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் இத்திட்டத்திற்குப் பெரிதும் உதவின. 
  • இந்த முயற்சியின் மூலம் பெறப்பட்ட அனுபவம், இந்நிறுவனத்தில் குழந்தைகளுக்கான நிலையான மற்றும் பிரத்யேக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தை மேம்படுத்துவதில் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான 12 மாற்று ஆவணங்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:
Puducherry