• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /நவம்பர் 10 ராசிபலன் : மேஷம் to மீனம்..எந்த ராசிக்கு என்ன பலன்? இதோ விவரம்..

நவம்பர் 10 ராசிபலன் : மேஷம் to மீனம்..எந்த ராசிக்கு என்ன பலன்? இதோ விவரம்..

12 ராசிகளிலும் அவரவர் ராசிக்கு ஏற்றார் போன்று அவரவர் நாட்கள் அமையும். அந்த வகையில், இன்று உங்களுடைய ராசிக்கு என்ன பலன் இருக்கிறது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 10, 2026, 05:53 IST|Updated: Nov 10, 2026, 06:01 IST
joinshare
நவம்பர் 10 ராசிபலன் : மேஷம் to மீனம்..எந்த ராசிக்கு என்ன பலன்? இதோ விவரம்..
Image Credit: Today Raipalan | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். இதையடுத்து, நவம்பர் 10ஆம் தேதியான இன்று, உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷம்

புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான முயற்சிகள் மேம்படும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உணவு விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் பொறுமை வேண்டும்.

ரிஷபம்

உறவுகள் உங்கள் குணத்தை அறிந்து செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

கனிவான பேச்சுகளால் மதிப்புகள் உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபாரத்தில் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சூழல்கள் உண்டாகும். உத்தியோக தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

கடகம்

முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார இடமாற்றத்திற்கான முயற்சிகள் கைகூடும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதுவிதமான கனவுகள் உருவாகும்.

சிம்மம்

சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய விஷயங்களில் நிதானத்தோடு செயல்படவும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பாடங்களில் இருந்த குழப்பங்கள் குறையும்.

கன்னி

முயற்சிகளுக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். அரசு பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும்.

துலாம்

செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். எதிர்காலம் நிமித்தமான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

விருச்சிகம்

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். துரிதமான செயல்பாடுகள் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும்.

மேலும் படிக்க | கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் முருகன் கோயில் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தனுசு

புதிய நபர்களால் அலைச்சல் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தொழிலில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். கல்வி நிமித்தமான குழப்பங்கள் குறையும்.

மகரம்

உத்தியோகப் பணிகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் வருகை தெளிவை உருவாக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வரவுகள் தேவைக்கு இருக்கும். சுபகாரியங்களில் இருந்து மந்த நிலை விலகும்.

கும்பம்

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். மனை தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக தொடர்பான பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும்.

மீனம்

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் சில மாற்றம் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | 3 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி: மேஷம் முதல் மீனம் வரை... யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து?

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan