Team India Squad Announcement: மேற்கிந்திய தீவுகள் அணி 5 டி20ஐ மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளை விளையாட இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான டி20ஐ, ஓடிஐ தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
செப். 27, செப். 30, அக். 3 ஆகிய தேதிகளில் முறையே திருவனந்தபுரம், கௌகாத்தி, நியூ சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெறுகின்றன. அக். 6, அக். 9, அக். 11, அக். 14, அக். 17 ஆகிய தேதிகளில் முறையே லக்னோ, ராஞ்சி, இந்தூர், ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 5 டி20ஐ போட்டிகள் நடைபெறுகின்றன.
இதற்கிடையே, ஜப்பான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி வரும் செப். 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டித்தொடரில் இந்திய அணி நேரடியாக காலிறுதிப் போட்டியில் விளையாடும். அக். 3ஆம் தேதிவரை இறுதிப்போட்டி நடைபெறும். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ தொடரும், ஆசிய விளையாட்டு போட்டித் தொடரும் ஒரே நேரத்தில் நடைபெற இருக்கிறது.
மேலும், ஜப்பான் அணிக்கு எதிரான டி20ஐ மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டித்தொடரில் இந்திய டி20ஐ ஸ்குவாடில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதில் விப்ராஜ் நிகம் சேர்க்கப்பட்டார்.
ஆசிய விளையாட்டுப் போட்டித்தொடரில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் விளையாடுவார்.
🚨 News 🚨#TeamIndia ODI & T20I squads announced for West Indies tour of India 2026, along with updated squad for Japan T20I & Asian Games.
More Details ▶️https://t.co/Lxx3Bz8Q14 pic.twitter.com/Y9RGlQ09XK— BCCI (@BCCI) September 16, 2026
சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி ஓடிஐ தொடரில் விளையாட இருக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் சுற்றுப்பயணம் செல்வதால் கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் விளையாட உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓபனிங் பேக்-அப்பாக இருப்பார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்படுவார். 2வது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வாகவில்லை. துருவ் ஜூரேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா தேர்வாகவில்லை.
நிதிஷ் குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜா மற்றும் சிராஜ் மீண்டும் ஓடிஐ கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளனர். அதேநேரத்தில், ஆகிப் நபி, நமன் திர் ஆகியோருக்கு ஓடிஐ-ல் வாய்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20ஐ தொடருக்கான அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு தொடரில் விளையாடும் யாஷ் தாக்கூர், விப்ராஜ் நிகம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். குல்தீப் யாதவ், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் டி20ஐ மற்றும் ஆசிய விளையாட்டுத் தொடர் - இந்திய அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூரியவன்ஷி, யஷ்தீப் தாகூர், விப்ராஜ் நிகம்.
இந்திய ஓடிஐ அணி: சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், முகமது சிராஜ், ஆக்கிப் நபி, யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்தியாவின் டி20ஐ அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்), சிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.