Varun Chakravarthy Injury Replacement Explained: இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியிருக்கிறது. இந்திய அணி மூன்று பார்மட்டிலும் பலம் பெற்று வரும் சூழலில், சமீப காலமாகவே வீரர்கள் தொடர்ச்சியாக காயத்தில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஓரிரு வீரர் இந்திய அணியின் பிரதான வீரர்கள் பலரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் புகலிடமாக பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையமே விளங்குகிறது.
ஜஸ்பிரித் பும்ராவின் பிட்னஸ் தொடர்ச்சியாகவே சிக்கலுக்கு உரியதாகவே உள்ளது. ஹர்திக் பாண்டியா பிட்னஸ் காரணமாக தற்போது வெறும் வொயிட் பால் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் தொடருக்கு பின் இன்னும் களத்திற்கு திரும்பவில்லை. இப்போதுதான் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டார்.
ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் இன்னும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் முழு உடற்தகுதிபெற பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சாய் சுதர்சன் காயத்தில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறார். நிதிஷ் குமார் ரெட்டி காயத்தில் இருந்து மீண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார்.
இந்தச் சூழலில், வருண் சக்ரவர்த்தி மீண்டும் காயத்தில் சிக்கியிருக்கிறார். கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயத்தில் வருணுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து மீண்டு வந்து டிஎன்பிஎல் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு ஆப்கானிஸ்தான் டி20ஐ தொடரில் விளையாடினார்.
முதல் டி20ஐ போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றிய வருண் சக்ரவர்த்தி Side Strain காரணமாக நடப்பு ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் இம்மாத இறுதியில் ஜப்பான் நாட்டில் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டித்தொடரில் பங்கேற்கும் வாய்ப்பும் குறைவாகும்.
இந்தச் சூழலில், வருண் சக்ரவர்த்திக்கு பதில் ஆசிய விளையாட்டு போட்டித்தொடரில் மாற்று வீரராக யாரை பிசிசிஐ தேர்வு செய்யும் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. ஏற்கெனவே இந்திய அணி ஸ்குவாடில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் உள்ளிட்டோர் இருப்பதால் பிசிசிஐ தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு வீரர்களை இங்கு காணலாம்.
வருண் சகர்வர்த்தி இன்னும் ஆசிய விளையாட்டு போட்டித்தொடரில் இருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை பிசிசிஐ சிறப்பு மையத்தில் அவர் இந்த வாரத்திற்குள் பிட்னஸை நிரூபிக்கவில்லை என்றால் அவரது ஜப்பான் சுற்றுப்பயணம் ரத்தாக அதிக வாய்ப்புள்ளது.
அப்படியிருக்க, குல்தீப் யாதவை அவருக்கு பதில் அனுப்புவது பிசிசிஐக்கு பாதுகாப்பான ஆப்ஷனாக இருக்கும். புதிய வீரர்களை வளர்த்தெடுக்கலாம் என பிசிசிஐ நினைத்தால் விப்ராஜ் நிகம் அல்லது யாஷ் ராஜ் புஞ்சாவை முயற்சிக்கலாம். குர்னால் பாண்டியாவுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் அவரை முயற்சிப்பதில் தவறு ஏதுமில்லை.