• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ODI-ல் ஓரங்கட்டப்பட்டது ஏன்...? முக்கிய காரணங்கள்!

ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ODI-ல் ஓரங்கட்டப்பட்டது ஏன்...? முக்கிய காரணங்கள்!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ ஸ்குவாடில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்படாததன் காரணங்களை இங்கு விரிவாக அலசலாம்.

Written BySudharsan G
Published: Sep 17, 2026, 12:06 PM IST|Updated: Sep 17, 2026, 12:14 PM IST
joinshare
ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ODI-ல் ஓரங்கட்டப்பட்டது ஏன்...? முக்கிய காரணங்கள்!
Image Credit: Hardik Pandya, Rishabh Pant | AI Generated Images : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

India National Cricket Team: மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. மூன்று ஓடிஐ மற்றும் 5 டி20ஐ போட்டிகளில் இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணி மோத உள்ளன.

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் ஓடிஐ தொடர் நடைபெறும் வேளையில் ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டித்தொடர் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடருக்கான இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல், இரானி கோப்பை 2026 போட்டிக்கான Rest of India ஸ்குவாட் அறிவிக்கப்பட்டது. ஓடிஐ தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுத் தொடர் நடைபெறுவதால் டி20ஐ கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரால் ஓடிஐ ஸ்குவாடில் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றார். கேஎல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

🚨 News 🚨#TeamIndia ODI & T20I squads announced for West Indies tour of India 2026, along with updated squad for Japan T20I & Asian Games.

More Details ▶️https://t.co/Lxx3Bz8Q14 pic.twitter.com/Y9RGlQ09XK

— BCCI (@BCCI) September 16, 2026

ஜடேஜா, சிராஜ் ஆகியோருக்கு ஓடிஐ ஸ்குவாடில் மீண்டும் கிடைத்திருக்கிறது. நமன் திர், ஆகிப் நபி ஆகியோர் முதன்முதலாக ஓடிஐ ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இடம் கிடைக்கவி்லை.

இதில் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படாததற்கு தனித்தனி காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.

ஹர்திக் பாண்டியாவுக்கு கெடு

  • ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
  • மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் ஹர்திக் பாண்டியாவை நேரடியாக களமிறக்க தேர்வுக்குழு திட்டமிட்டது என கூறப்படுகிறது. ஆனால், ஹர்திக் பாண்டியாவால் 10 ஓவர்களை வீச முடியும் என்றால் மட்டுமே இந்திய அணிக்கு எடுக்கப்படுவார் என தேர்வுக்குழு உறுதியாக தெரிவித்துவிட்டதாம்.
  • செப்டம்பர் 20ஆம் தேதி விளையாடுவதற்கான அனுமதியை பிசிசிஐ சிறப்பு மையத்திடம் இருந்து ஹர்திக் பாண்டியா பெற்றுவிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
  • ஆனால் அவர் ஆறு ஓவர்களை மட்டுமே வீசியிருக்கிறார். ஆறு ஓவர்கள் வீசுவது போதாது, 10 ஓவர்களையும் வீசத் தொடங்கினால் மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படும் என்பதில் தேர்வுக்குழு உறுதியாக உள்ளது.
  • ஹர்திக் பாண்டியா இன்னும் ரெடியாகவில்லை என்பதால்தான் ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாட இருந்த நிதிஷ் குமார் ரெட்டியை டி20ஐ அணியில் இருந்து விடுவித்து ஓடிஐ அணியில் சேர்த்துள்ளனர். நிதிஷ் குமார் ரெட்டி 10 ஓவர்களை வீசும் திறன் பெற்றிருக்கிறார் என இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
  • அக்டோபர் 6, அக்டோபர் 9, அக்டோபர் 11 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய ஏ அணி மோதுகிறது. அதில் ஹர்திக் பாண்டியா 10 ஓவர்களை வீசினால் மட்டுமே நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைக்கவும்.

ரிஷப் பண்டுக்கு ஏன் வாய்ப்பில்லை...?

  • ரிஷப் பண்ட் தற்போது டெஸ்ட் அணிக்கான வீரராக மட்டுமே பார்க்கப்படுகிறார். அவர் வொயிட் பால் போட்டிகளில் விளையாடி சுமார் 2 ஆண்டுகளாகிவிட்டது.
  • திறமை இருந்தும் வொயிட் பால் கிரிக்கெட்டில் அவரது முழுமையான திறனை வெளிக்காட்டவில்லை என அணி நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே தேர்வுக்குழு அவரை தேர்வு செய்யவில்லை என தெரிகிறது.
  • விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் செயல்படும் நிலையில், பேக்அப் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை துருவ் ஜூரேல் சொதப்பினாலும் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் இந்திய அணியின் ஆப்ஷனாக இருப்பார்கள்.
  • எனவே ரிஷப் பண்ட் மீண்டும் வொயிட் பால் கிரிக்கெட்டில் சோபிக்க வேண்டும் என்றால் சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும். அதேபோல், ஐபிஎல் தொடரிலும் அவர் ரன்களை குவித்தால் மட்டுமே வொயிட் பால் கிரிக்கெட்டில் தலையெடுக்க முடியும்.

மேலும் படிக்க | ஓடிஐ, டி20ஐ ஸ்குவாட் அறிவிப்பு... Asian Games தொடரில் இந்திய அணி மாற்றம்

மேலும் படிக்க | Explainer: வருண் சக்ரவர்த்திக்கு பதில்... இந்திய அணியில் எந்த ஸ்பின்னருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

மேலும் படிக்க |நடராஜனை கழட்டிவிடும் டெல்லி கேப்பிடல்ஸ்... கொக்கிப்போட்டு தூக்குமா CSK? - அஸ்வின்

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team