நடுரோட்டில் மனைவியுடன் சண்டை போட்ட பாட் கம்மின்ஸ்... வைரலாகும் வீடியோ
ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் அவரது மனைவி உடன் பொதுவெளியில் சண்டையிடம் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் புயலை கிளிப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sandpaper Gate, Pat Cummins: 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும், கேம்ரூன் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றின் கருப்புப் பக்கமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | CSK: நேதன் எல்லிஸுக்கு மாற்று இவர்தான்.. ரூ. 10 கோடி வரை செலவிட முடிவு!
காவாஜா சொன்னது என்ன?
இந்தச் சூழலில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா 'Sabr' என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். இதில் அவரது சிறு வயது முதல் கிரிக்கெட் வாழ்க்கை வரை அனைத்தையும் விவரித்துள்ளார். அதில் 2018 பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்தும் எழுதியிருக்கிறார்.
குறிப்பாக, பந்தை சேதப்படுத்தும் திட்டம் பேட் கம்மின்ஸ் உள்பட அனைத்து வீரர்களுக்கும் தெரிந்துதான் நடந்தது என கவாஜா குறிப்பிட்டுள்ளார். மேலும், கேப் டவுன் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய, போர்ட் எலிசெபத் போட்டியிலேயே பந்தை சேதப்படுத்தும் திட்டம் இருந்ததாகவும் கவாஜா குறிப்பிட்டிருந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் புகார்
இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மீண்டும் புயலை கிளப்பியிருக்கிறது. கவாஜாவுக்கு டேவிட் வார்னர் ஆதரவு தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கவாஜா கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்திக்கும் பாட் கம்மின்ஸ்
இந்த விவகாரம் தொடர்பாக, தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் எவ்வித விளக்கமும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், நாளைய தினம் (நவ. 13) இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.
பாட் கம்மின்ஸ் அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், நாளை (நவ. 13) காலை போட்டிக்கு முன்னர் கிரிக்கெட் சென்ட்ரல் மைதானத்தில் பயிற்சியில் இருப்பார் என்றும் அப்போது காலை 9.30 மணியளவில் சமீப நாட்களாக நடக்கும் விஷயங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேச தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கவாஜாவின் நீண்ட பட்டியல் கொண்ட குற்றச்சாட்டுகளை நன்கு புரிந்துகொள்ள நேரம் தேவைப்படுகிறது என்றும் இதன்மூலம் அவற்றுக்கு விரிவாக விளக்கம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர் போட்டியை கண்டு, நியூ சௌத் வேல்ஸ் அணியை ஆதரவளிக்கும்படி குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் விவரங்களை அனுப்பச் சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஆஸ்திரேலிய உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் (Sheffield Shield) தொடர் நடைபெற்று வருகிறது. அதில், சிட்னியில் உள்ள சென்ட்ரல் கிரிக்கெட் மைதானத்தில் நியூ சௌத் வேல்ஸ் அணியும், தெற்கு ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இதில் பாட் கம்மின்ஸ் நியூ சௌத் வேல்ஸ் அணியைச் சார்ந்தவர். இருப்பினும் நடப்பு போட்டியில் அவர் விளையாடவில்லை.
கம்மின்ஸ் - மனைவி இடையே வாக்குவாதம்
இதற்கிடையே பாட் கம்மின்ஸ் அவரது மனைவி Becky உடன் பொது வெளியில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இருவரும் 2013ஆம் ஆண்டில் இருந்து இணைந்து வாழ்ந்து வரும் இவர்கள் பொதுவெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. இருப்பினும் கம்மின்ஸ் மற்றும் அவரது மகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் Becky பகிர்ந்துகொண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும் படிக்க | அக்சர் படேலும் வரல.. கடைசி நேரத்தில் நோ சொன்ன DC.. 24 வயது வீரருக்கு CSK குறி!