• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /வருண் சக்ரவர்த்தி காயம்... இதே வேலையா போச்சு - ஜப்பான் பயணம் கேன்சல்

வருண் சக்ரவர்த்தி காயம்... இதே வேலையா போச்சு - ஜப்பான் பயணம் கேன்சல்

Varun Chakravarthy Injury : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20ஐ தொடர் நடைபெற்று வரும் வேளையில், இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயத்தில் சிக்கி உள்ளார். ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்தும், ஜப்பான் சுற்றுப்பயணத்தில் இருந்தும் வருண் சக்ரவர்த்தி விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

Written BySudharsan G
Published: Sep 14, 2026, 08:54 PM IST|Updated: Sep 14, 2026, 09:08 PM IST
joinshare
வருண் சக்ரவர்த்தி காயம்... இதே வேலையா போச்சு - ஜப்பான் பயணம் கேன்சல்
Image Credit: Varun Chakravarthy Injury | Image Source : X/@BCCI

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Varun Chakravarthy Injury : இந்திய அணி அடுத்த இரண்டு மாதங்களுக்கு டி20ஐ, ஓடிஐ என வொயிட் பால் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த இருக்கிறது. தற்போது இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20ஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

ஜப்பான் செல்லும் இந்திய அணி

அடுத்து ஜப்பான் நாட்டுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான 75 ஆண்டுகால நட்புறவை போற்றும் வகையில் இரு நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20ஐ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் முதல்முறையாக இந்தியா - ஜப்பான் அணிகள் வரும் செப். 22ஆம் தேதி மோத இருக்கின்றன.

மேலும் படிக்க | இந்திய அணி வெற்றி... சொதப்பிய சஞ்சு சாம்சன் - வெறியோடு வெயிட் பண்ணும் சூர்யவன்ஷி

அதைத் தொடர்ந்தது நடப்பு செப்டம்பர் மாத கடைசியில் ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுமுனையில் இந்தியாவில் இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இடையிலான 3 ஓடிஐ போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ஒரே நாளில் 2 இந்திய அணிகள் விளையாடுகின்றன...

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அக்டோபர் 3ஆம் தேதி ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெறும், அன்றைய தினம் இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் இடையிலான 3வது ஓடிஐ போட்டி நடைபெறும்.

28 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் இரண்டு இந்திய கிரிக்கெட் அணிகள் வெவ்வேறு இடங்களில் விளையாட இருக்கின்றன. இதற்கு முன்னர், 1998ஆம் ஆண்டில் மலேசியா கோலாலம்பூர் காமன்வெல்த் போட்டியிலும், டொரொண்டோ சஹாரா கோப்பையிலும் இரண்டு இந்திய அணிகள் ஒரே நாளில் விளையாடின.

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

அதைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி முதல் மேற்கு இந்திய தீவுகளுடன் 5 டி20ஐ போட்டிகள் கொண்ட தொடர் தொடங்க உள்ளது. இவை அனைத்தும் உள்நாட்டில் நடைபெற இருக்கிறது. அடுத்து இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 5 டி20ஐ, 3 ஓடிஐ, 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 1ஆம் தேதிவரை இந்த சுற்றுப்பயணம் நீளும்.

வருண் சக்ரவர்த்தி காயம்

அடுத்த இரண்டு மாதங்களுக்கு அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற இருக்கும் சூழலில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மீண்டும் காயத்தில் சிக்கி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

🚨 VARUN CHAKRABARTHY INJURED 🚨

IPL 2026 - Played the matches with injury. 

IRE Tour - Injured. 

ENG Tour - Bowls only 7 overs & injured. 

ZIM Tour - Injured. 

AFG Tour - Bowls 4 overs & injured. 

Big question on players selection. pic.twitter.com/Nw5Vl6AVjc

— VIKAS (@Vikas662005) September 14, 2026

மேலும் படிக்க | IND vs WI ODI: இந்திய அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்? ரேஸில் CSK வீரரும் இருக்கிறாராம்!

காயத்தில் சிக்கியது மட்டுமின்றி நடப்பு ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்தும், அடுத்த ஜப்பான் சுற்றுப்பயணத்தில் இருந்தும் வருண் சக்ரவர்த்தி விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.

பிசிசிஐ தரப்பில் தகவல்

பிசிசிஐ தரப்பில் வெளியான தகவலில், "இது ஒரு புதிய காயம். எம்ஆர்ஐ பரிசோதனையில் Side Strain என தெரியவந்துள்ளது. (ஆப்கானிஸ்தான்) தொடரில் இருந்து விலகிய அவர், ஆசிய விளையாட்டுத் தொடரில் விளையாட வாய்ப்பில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

வீரர்கள் காயமடைவது தொடர் கதை

ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடை எலும்பு பகுதியில் வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டது. அதில் இருந்து குணமடைந்து ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடிய வருண் சகர்வர்த்திக்கு தற்போது மீண்டும் வேறு இடத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை எடுத்து வெறும் 16 ரன்களை மட்டும் கொடுத்து அசத்தலாக பந்துவீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீரர்கள் காயத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. இதனால், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தின் வீரர்கள் மறுவாழ்வு மையம் மீது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

மேலும் படிக்க | 8 பந்தில் 10 ரன்கள்.. சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்! 2வது டி20ல் இடம் கிடைக்குமா?

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team