• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஜெம் வீரமணி வழக்கு: 4 பெண் அதிகாரிகள் அடங்கிய SIT அமைப்பு - யார் யார்?

ஜெம் வீரமணி வழக்கு: 4 பெண் அதிகாரிகள் அடங்கிய SIT அமைப்பு - யார் யார்?

ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Written BySudharsan G
Published: Sep 25, 2026, 11:06 AM IST|Updated: Sep 25, 2026, 11:59 AM IST
joinshare
ஜெம் வீரமணி வழக்கு: 4 பெண் அதிகாரிகள் அடங்கிய SIT அமைப்பு - யார் யார்?
Image Credit: Gem Veeramani (Left), P.C. Thenmozhi IPS (Right) | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல்துறை கூடுதல் ஆணையராக உள்ள ஐஜி தேன்மொழி தலைமையில் 4 பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறையில் இணை ஆணையராக உள்ள டிஐஜி திஷா மிட்டல் உள்ளிட்டோரும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க | ஜெம் வீரமணி வழக்கு: யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை... ஸ்டாலின் சொன்ன விளக்கம்

ஜெம் வீரமணி வழக்கில் எஸ்ஐடி அமைப்பு

சிறப்பு புலனாய்வு குழு - 4 பெண் அதிகாரிகள்

பி.சி. தேன்மொழி, ஐபிஎஸ் சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு, காவல் கூடுதல் ஆணையர்
திஷா மிட்டல், ஐபிஎஸ்சென்னை பெருநகர காவல்துறை சட்டம் & ஒழுங்கு (மேற்கு) காவல் இணை ஆணையர்
ஜெ. முத்தரசி, ஐபிஎஸ்டிஜிபி/காவல்துறை தலைமைப் படைத் தலைவர் அலுவலகம் காவல் கண்காணிப்பாளர் / ஊடகத் தொடர்பு அலுவலர்
வி.வி. கீதாஞ்சலிசென்னை பெருநகர காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு, காவல் துணை ஆணையர்

சிபிஐக்கு மாற்றப்படுமா...?

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. சிபிஐ விசாரணை கோரும் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறுமிகளின் வீடியோக்கள் வெளியாகி உள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் என்.எல். ராஜா முறையிட்டிருந்தார். ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் உயர் காவல் அதிகாரிகள் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் முறையிட்டிருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு இன்று பிற்பகல் விசாரணை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல்துறையினர் விசாரணையை தொடரட்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது.

ஜெம் வீரமணி தொடர்பான வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக நீதிபதி லட்சுமி நாராயணன் முன் வேறொரு வழக்கறிஞர் முறையீடு செய்தார். இதுகுறித்து மனுதாக்கல் செய்யப்பட்டால் இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்... ஜெம் வீரமணி வழக்கு காரணமா?

கட்டாய காத்திருப்பில் மூத்த அதிகாரிகள்

முன்னதாக, ஜெம் வீரமணி குறித்து புகார் எழுந்த காலகட்டத்தில் சென்னை காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி அருண், சென்னை கூடுதல் ஆணையராக இருந்த ஐஜி கண்ணன் மற்றும் வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த யாஸ்மின் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

தமிழக வரலாற்றில் முதல்முறை

தமிழக காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ளி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கடமை தவறியதற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அருண் மீது நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த ஓரிரு நபர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், தேர்தல் தொடர்பான காரணங்களுக்காகவே தேர்தல் ஆணையம் மூலமாக ஏடிஜிபி, டிஜிபி அந்தஸ்து அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு முன்னர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

CM விஜய்யின் நேரடி தலையீடு

பாலியல் குற்றம் தொடர்பான புகாரை உரிய முறையில் விசாரிக்காத குற்றச்சாட்டில் முதலமைச்சர் விஜய் தலையிட்டு ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான வழக்கில், 2024ஆம் ஆண்டில் வீடியோ ஆதாரம் கிடைத்தும் நடவடிக்கை எடுக்க தவறியதாகப் புகார் எழுந்துள்ளது. சிறுமிகளுக்கு எதிரான குற்றம் மற்றும் புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் இதில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் கூறப்படுகின்றன.

மேலும் படிக்க | CM விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கை... என்ன மேட்டர்? 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu