தமிழகத்தின் தொழில் முதலீட்டுச் சூழல் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், தென்கொரிய நிறுவனங்களின் புதிய முதலீட்டு அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த ஹ்வாஷின் ஆட்டோமோட்டிவ் இந்தியா மற்றும் சியோன் இ-ஹ்வா சம்மிட் ஆட்டோமோட்டிவ் இந்தியா (Seoyon E-Hwa Summit) ஆகிய இரண்டு நிறுவனங்களும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மொத்தம் 1,370 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.
இதுதொடர்பாக, நவம்பர் 11-ஆம் தேதி இரு நிறுவனங்களும் தங்களது முதலீட்டுத் திட்டங்களை உறுதிப்படுத்தி கடிதம் அளித்துள்ளன. இதில், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஹ்வாஷின் நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் 850 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன உற்பத்தித் தொழில்நுட்பம், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும்