SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி விற்பனை பத்திரம் பெற ரூ.18.45 கோடி சிறப்பு வட்டி தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.

Written By Sudharsan G
Published: Nov 12, 2026, 06:10 PM IST | Updated: Nov 12, 2026, 06:17 PM IST
Image Credit: AI Generated Image : ChatGPT
Join

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாகச் செலுத்தி விற்பனை பத்திரம் பெற ஏதுவாக, ஓராண்டு கால சிறப்புத் திட்டத்தின் கீழ் ரூ.18.45 கோடி சிறப்பு வட்டி தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு சிறப்பு வட்டி தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் தற்போது அறிவித்துள்ளார். 6,496 வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு 18.45 கோடி ரூபாய் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் தவணை கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் தவணை காலம் முடிவற்ற திட்டங்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | குரியன் ஜோசப் குழுவை கலைத்தது ஏன்? மாநில சுயாட்சி விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு என்ன? Explaine

சிறப்பு வட்டி தள்ளுபடி

நிலுவைத் தொகை செலுத்தத் தவறியவர்கள் பயன்பெறக் கூடிய வகையில் இந்த சிறப்பு வட்டி தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் தவணை முறை திட்டத்தின் கீழ் மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று, தவணை காலம் முடிவுற்ற பின்னர், விற்பனை பத்திரம் பெறாமல் சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எதற்கு வட்டி தள்ளுபடி...?

இவர்கள் முழு தொகையையும் செலுத்தாமல் விற்பனை பத்திரம் பெற முடியாமல் உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

பத்திரம் வழங்குவதில் ஏற்படக்கூடிய காலதாமதத்திற்கான வட்டி சுமையைக் கருத்தில் கொண்டு, விற்பனை பத்திரம் விரைவாக வழங்குவதற்கு ஏதுவாக வட்டி தள்ளுபடி செய்வதாக 2026-27ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

என்னென்ன வட்டி தள்ளுபடியாகும்?

அதன்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் தவணை கொள்முதல் திட்டங்களில் வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, மனை ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகையைச் செலுத்த தவறியிருக்கக் கூடிய ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறக் கூடிய வகையில்தான் இந்த அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ், ஸ்வெட்டர், ரெயின்கோட்: அரசு டெண்டர் வெளியீடு

அதேநேரத்தில், நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்தபவர்களுக்கு விதிக்கப்படக்கூடிய அபாரத வட்டி தள்ளுபடியும், வட்டி முதலாகத்தின் மீதான வட்டி தள்ளுபடியும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தில் வசூலிக்கப்படக்கூடிய தொகைக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதத்திற்கு உண்டான வட்டி தள்ளுபடியும் செய்யப்பட்டு விற்பனை பத்திரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரூ.18.45 கோடி தள்ளுபடி

இந்த திட்டம் ஓராண்டு காலத்திற்கு சிறப்புத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, 6,496 ஒதுக்கீடுதாரர்களுக்கு இந்தத் திட்டம் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சருடைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, இந்த  திட்டத்தின் மூலமாக சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வீட்டு வசதி வாரியத்திற்கு சுமார் 92.39 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், இந்த சிறப்பு வட்டி சலுகையின் மூலமாக ஒதுக்கீடுதாரர்களுக்கு ரூ.18.45 கோடி தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | நவம்பர் 13ம் தேதி மாணவர்களுக்கு கேக்.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. CM விஜய் அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES