Madurantakam Dharapuram By-Election Updates: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.
இந்நிலையில், நாளையுடன் (அக். 4) இரு தொகுதிகளிலும் பரப்புரை நிறைவடைய இருக்கிறது. இதனால், நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் சில விதிகள் நடைமுறையில் இருக்கும். இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கு வரிசையாக காணலாம்.
இந்த விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது அபராதம், சிறை என இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
வாகன அனுமதி தொடர்பாக வாக்குப்பதிவு அன்று வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
இந்த வாகனங்களுக்கான அனுமதி தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை
வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.