SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஜவஹர் நவோதயா வித்யாலயா: நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஒரு முக்கிய நிகழ்வாக, ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை அமைப்பதற்குத் தெரிவித்துள்ள எதிர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று கேட்டுக்கொண்டது.

Written By Sripriya Sambathkumar
Published: Sep 17, 2026, 03:38 PM IST | Updated: Sep 17, 2026, 03:44 PM IST
Join

புது தில்லி: ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த திமுக மற்றும் அதிமுக அரசுகள் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை (Jawahar Navodaya Vidyalaya) அறிமுகப்படுத்துவதை எதிர்த்து வந்துள்ளன. இதனால், இந்தியாவில் ஒரு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி கூட இல்லாத ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இத்திட்டம் மாநிலத்தின் நீண்டகால 'இருமொழி'க் கொள்கைக்கு முரணானது என்று இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றன.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

ஒரு முக்கிய நிகழ்வாக, ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை அமைப்பதற்குத் தெரிவித்துள்ள எதிர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று கேட்டுக்கொண்டது. இந்தி மொழியை முழுமையாக விலக்கி வைக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மாநில அரசும் மத்திய அரசும் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு என்ன?

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை அமைக்குமாறு மத்திய அரசு ஊத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு தொடர்ந்த வழக்கை நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது, ​​மாநில அரசின் ஆட்சேபனைகள் குறித்து நீதிமன்றம் கேட்டறிந்தது. நவோதயா பள்ளிகளை அமைப்பது மாநிலத்தின் மொழிக் கொள்கைக்கு முரணானது அல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், இப்பிரச்சினை குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் மாநில அரசிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

மேலும் படிக்க | கல்லூரி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வி உதவித்தொகை: முக்கிய அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் மொழிக்கொள்கை தொடர்பான சர்ச்சை

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இச்சச்சரவு பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், 2017-ஆம் ஆண்டில் நவோதயா பள்ளிகளை அமைக்க அனுமதிக்குமாறு மாநில அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது.

அப்போது, ​​மாநிலத்தில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்திருந்தது. மேலும், எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியே பயிற்று மொழியாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அது கூறியிருந்தது.

மேலும் படிக்க | உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்: நகராட்சி, மாநகராட்சி, பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஷாக்

ஜூலை 16 அன்று வந்த உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்

முன்னதாக, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை (JNVs) அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளுமாறு ஜூலை 16 அன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தியா ஒரு "கூட்டாட்சி சமூகம்" என்று குறிப்பிட்டது. இவிஷயத்தில் மாநில அரசு முரண்பட்ட அல்லது எதிர்ப்பான அணுகுமுறையைக் கொண்டிருக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தது.

மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளான ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, ​​நீதிமன்றம் இவ்வாறு கூறியது:

"உங்கள் மாநிலச் சட்டம் குறித்தும், அது தொடர்பாக நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பது குறித்தும் மத்திய அரசின் செயலாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள். தயவுசெய்து ஒரு நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருங்கள்."

ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களில் பின்பற்றப்படும் இந்தி மொழி கற்றல் உள்ளிட்ட 'மும்மொழித் திட்டம்', தமிழகத்தில் பின்பற்றப்படும் 'இருமொழித் கொள்கைக்கு' முரணானது என்று தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது.

மாநில அரசு கட்டாயமாக்கியுள்ள இருமொழித் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் பாடத்திட்டத்தில் இந்தியை விலக்கும் 'தமிழ் கற்றல் சட்டம், 2006' ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் காரணமாக, தமிழ்நாடு ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை (JNV) எதிர்த்து வருகிறது. ஜே.என்.வி (JNV) அமைப்பின் மும்மொழித் திட்டமானது, மாநிலத்தின் பிராந்திய மொழிப் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் கல்விசார் தன்னாட்சியுடன் நேரடியாக முரண்படுவதாக மாநில அரசு வாதிடுகிறது.

மேலும் படிக்க | மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்புக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES