தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று: பருவமழை முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு வரை... என்னென்ன எதிர்பார்க்கலாம்?
TN Cabinet Meeting: இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தேவையான முன்மொழிவுகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
Tamil Nadu Cabinet Meeting: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஆக்டோபர் 29), வியாழக்கிழமை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தவெக ஆட்சியின் மூன்றாவது மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக அரசு வட்டாரங்களின் தகவலின் படி இந்தக் கூட்டத்தின் முடிவில் பின்வரும் முக்கியத் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வடகிழக்கு பருவமழைக்கான சீரமைப்பு பணிகள்,
- முக்கியத் தொழில் திட்டங்கள்,
- முதலீட்டு முன்மொழிவுகள்,
- சட்டம் ஒழுங்கு பராமரிப்பு,
- நலத்திட்டங்கள் மற்றும்
- உள்கட்டமைப்பு மேம்பாடு
காலை 10.30 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தேவையான முன்மொழிவுகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) தொடர்பான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம்.
2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைபெறவிருக்கும் அடுத்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, புதிய சட்டங்களை உருவாக்குவது மற்றும் ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கக்கூடும்.
வெற்றி தமிழகம் திட்டம்
மேலும், 'வெற்றி தமிழகம் தொலைநோக்கு ஆவணத்தில்' (Vetri Tamizhagam Vision Document) குறிப்பிடப்பட்டுள்ள நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம்.
பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான இந்தக் கூட்டத்தில், முக்கியமாக பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (Battery Energy Storage System - BESS) கொள்கை மற்றும் பல்வேறு தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், சில முக்கிய நிர்வாக முடிவுகளும் எடுக்கப்படக்கூடும்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலிலும், மின்வெட்டுப் பிரச்சினைகளைச் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைத்து, தேவைப்படும் நேரத்தில் விநியோகிக்கும் வசதிகளை ஊக்குவிப்பதே BESS கொள்கையின் நோக்கம். இத்தகைய சேமிப்பு வசதிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமன் செய்யவும், மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் உதவும்.
இந்தக் கொள்கை, தனியார் ஆலோசனை நிறுவனமான 'ஏர்ன்ஸ்ட் அண்ட் யங்' (Ernst & Young) உதவியுடன் உருவாக்கப்பட்டது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற முக்கிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள கொள்கைகளை ஆய்வு செய்த பிறகு, கடந்த ஐந்து மாதங்களாக இந்தக் கொள்கை வரைவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மின்சார வாரியம் இந்தக் கொள்கையை அமைச்சரவையின் ஒப்புதலுக்குச் சமர்ப்பித்திருந்தாலும், அதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களுடன் இது குறித்து பலமுறை ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொள்கை நடைமுறைக்கு வந்தவுடன், புதிய சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
தமிழ்நாடு தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இருப்பினும், மின்சார உற்பத்தியில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தின் பங்கு அதிகரித்து வருவதால், வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் வசதிகளின் தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது.
ரேஷன் கடைகளில் தீபாவளி சிறப்பு தொகுப்பு
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் சிறப்பு தொகுப்பு கொடுப்பதை பற்றிய முக்கிய முடிவும் எடுக்கப்படலாம் என கூறப்படுகின்றது. தமிழகத்தில் மொத்தம் சுமார் 2.29 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு, சர்க்கரை, சமையல் எண்ணெய், கடலை மாவு, ரவை, பருப்பு வகைகள், முந்திரி, திராட்சை அடங்கிய தீபாவளி தொகுப்பை அரசு அளிக்கும் என நம்பப்படுகின்றது.
மேலும் படிக்க | அர்னாப் புயலுக்கு 5 பேர் பலி..தமிழ்நாட்டுக்கு அடுத்து எப்போ மழை? அப்டேட் இதுதான்..