• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE : அர்னாப் புயலால் 5 பேர் மரணம், கே.என்.நேரு வீட்டில் சோதனை, ஸ்பெயின் ரயில் விபத்து-முக்கிய செய்திகள்
Live Now

Tamil News LIVE : அர்னாப் புயலால் 5 பேர் மரணம், கே.என்.நேரு வீட்டில் சோதனை, ஸ்பெயின் ரயில் விபத்து-முக்கிய செய்திகள்

Tamil News LIVE Updates : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? மாநிலத்தை தாண்டி தேசியம் மற்றும் உலகளவில் என்ன நடக்கிறது? இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 29, 2026, 09:17 AM IST|Updated: Oct 29, 2026, 03:36 PM IST
joinshare
Tamil News LIVE : அர்னாப் புயலால் 5 பேர் மரணம், கே.என்.நேரு வீட்டில் சோதனை, ஸ்பெயின் ரயில் விபத்து-முக்கிய செய்திகள்
Image Credit: LIVE News Tamil Nadu | லைவ் பிரேக்கிங் செய்திகள்
29 Oct 2026 14:49 IST (IST)
share

Chennai Tirupati Trains: டிசம்பர் 9 முதல் 27 வரை ரயில்கள் ரத்து

தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் பிரிவில் உள்ள ரேணிகுண்டா யார்டில், ரயில் பாதைகளை நவீனப்படுத்தும் மற்றும் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த காரணத்தால், சென்னைக்கும் திருப்பதிக்கும் இடையே இயக்கப்படும் நான்கு விரைவு ரயில் சேவைகள் டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது... (மேலும் படிக்க)

29 Oct 2026 14:27 IST (IST)

Tamil Nadu auto fare new rules : ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

Tamil Nadu auto fare new rules : தமிழகத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தலை இங்கே பார்க்கலாம். (மேலும் படிக்க)

29 Oct 2026 14:12 IST (IST)

UP Government Jobs: போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாது

அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, வன்முறை வழிகள் மூலம் தற்போதைய அமைப்பை மாற்றுவதை ஆதரிக்கும் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பது தகுதியிழப்புக்கு ஒரு காரணமாக அமையலாம். விண்ணப்பதாரருக்கு 21 வயது பூர்த்தியான பிறகு, நன்னடத்தை சரிபார்ப்புக்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் இதுபோன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றிருப்பது, அவர் தொடர்ந்து அதில் ஈடுபட்டுள்ளதற்கான அறிகுறியாகக் கருதப்படலாம்... (மேலும் படிக்க)

29 Oct 2026 14:02 IST (IST)

Chalo Delhi Rally: 'இந்தியா' கூட்டணி பேரணி அனுமதி

வாக்காளர் பட்டியல் (SIR) முறைகேடுகளுக்கு எதிராக நவம்பர் 1-ல் நடைபெறவுள்ள 'சலோ டெல்லி ராம்லீலா மார்ச்' பேரணிக்கு 3,500 காவலர்கள் பாதுகாப்புடன் டெல்லி காவல்துறை நிபந்தனை அனுமதி அளித்துள்ளது. முழு விவரங்களை அறிய.. (மேலும் படிக்க)

29 Oct 2026 13:07 IST (IST)

TN Govt | ரூ.200க்கு 10 மளிகை பொருட்கள்!

தமிழ்நாடு கூட்டுறவு அங்காடிகளில், ரூ.200க்கு 10 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அறிவிப்பு; சென்னையில் நாளை தொடங்கி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு. கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, மிளகாய்,  கடுகு, சீரகம் டங்கிய பொடுகள் வழங்க ஏற்பாடு. தீபாவளி பண்டிகையையொட்டி, குறைந்த விலையில் மளிகை பொருட்கள் வழங்க திமிழக அரசு திட்டம்.

29 Oct 2026 13:04 IST (IST)

CM Vijay | முதல்வர் விஜய் அறிவுறுத்தல்!

முதல்வர் விஜய், இன்று அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, சமூக வலைதளத்தில் வெளியாகும் எதிர்மறை கருத்துகளால் தொவடைய வேண்டாம் தொடர்ந்து நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் என்று தலைமை செயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

29 Oct 2026 12:23 IST (IST)

Anbil Maghesh | அன்பில் மகேஷ் விசாரணை ஒத்திவைப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு; காவல்துறை சார்பில் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் ஒத்திவைப்பு; அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீசாரின் மனுவும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைப்பு.

29 Oct 2026 12:02 IST (IST)

DA Arrears: டிஏ அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்

டிஏ உயர்வு (DA Hike) ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்பதால், ஊழியர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை கிடைக்கும். உதாரணமாக அடிப்படைச் சம்பளம் ₹18,000 கொண்ட ஒரு ஊழியருக்கு, 3% டிஏ உயர்வு மாதத்திற்கு கூடுதலாக ₹540-க்கு சமமாகும். நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்தால், அந்த ஊழியர் தனது வரவிருக்கும் சம்பளத்துடன் கூடுதலாக ₹,2160-ஐப் பெறுவார்... (மேலும் படிக்க)

29 Oct 2026 11:56 IST (IST)

Kalaiyarasan Arrest | பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டாரா?

Explained : பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான கலையரசன், சமீபத்தில் போலீசாரால் அதிகாலையில் அழைத்துசெல்லப்பட்ட விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

29 Oct 2026 11:49 IST (IST)

Israel Election Results: இஸ்ரேலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா நெதன்யாகு?

இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை (61 இடங்கள்) கிடைக்காததால் பெரும் அரசியல் முட்டுக்கட்டை! அரபு கட்சிகள் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான 4 சாத்தியக்கூறுகள் என்ன? (மேலும் படிக்க)

29 Oct 2026 11:35 IST (IST)

Tamil Nadu Judicial Exam Rules Changed: தமிழகத்தில் நீதிபதிகள் தேர்வில் அதிரடி மாற்றம்

மாவட்ட நீதிபதி, சிவில் நீதிபதி நேரடி நியமன விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் (மேலும் படிக்க)
 

29 Oct 2026 11:32 IST (IST)

Tamil Nadu Free Bus Travel for Disabled Persons: மாற்றுத்திறனாளிகளுக்கு இனி 100% இலவச பயணம்

Tamil Nadu Free Bus Travel for Disabled Persons: மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் அதிரடி பரிசாக எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இனி 100% இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

29 Oct 2026 11:10 IST (IST)

ISRO | விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எப் 18 ராக்கெட்!

ஆந்திர மாநில, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஹ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளைஇ இரவு 11.51 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி - எப் 18 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது; இதில் வழிகாட்டுதல் சேவைகளுக்காக என்.வி.எஸ் -03 செயற்கை கோள் பயணிக்க இருக்கிறது.

29 Oct 2026 10:51 IST (IST)

PM Kisan Update: பயனாளி பட்டியலில் பெயர் உள்ளதா?

இந்த முறை அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் 24வது தவணையான (PM Kisan 24th Installment) ₹2,000 கணக்கிற்கு வருமா என்பது கேள்விக்குறிதான். பல்வேறு காரணங்களுக்காக சில விவசாயிகளின் பெயர்கள் பயனாளி பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவணைத் தொகை தங்கள் கணக்கிற்கு வந்து சேருமா அல்லது பெயர் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதா என்ப்தை முதலில் விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும்... (மேலும் படிக்க)

29 Oct 2026 10:38 IST (IST)

Weather Report | தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்!

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; அடுத்த 24 மணி நேரத்தில், தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 Oct 2026 09:50 IST (IST)

MK Stalin | பொருளாதார நிபுணர் கைது..மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பொருளாதார நிபுணரான கலையரசன் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டாரா என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

29 Oct 2026 09:37 IST (IST)

EPS Pension Update: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா?

தற்போது ₹1,000 ஆக உள்ள குறைந்தபட்ச EPS (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. நவம்பர் 19 அன்று நடைபெறவுள்ள CBT கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படலாம் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன... (மேலும் படிக்க)
 

29 Oct 2026 09:34 IST (IST)

TN Cabinet Meeting: முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஆக்டோபர் 29), வியாழக்கிழமை அன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தவெக ஆட்சியின் மூன்றாவது மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது... (மேலும் படிக்க)

29 Oct 2026 09:23 IST (IST)

Cancer Medicines Prices | புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு!

மத்திய அரசு, 500க்கும் மேற்பட்ட புற்றுநோய் மருந்துகளின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

29 Oct 2026 09:21 IST (IST)

Minister Keerthana | குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்!

தமிழ்நாட்டின் மாநில தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா, தன்னைப்பற்றி வலம் வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ராணுவம், காவல் துறை பணிகளுக்கான இலவசப் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

ராணுவம், காவல் துறை பணிகளுக்கான இலவசப் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

2

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஷாக்! 3 வருஷம் முடிஞ்சா கட்டாய இடமாறுதல் explained

3

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம்: மாதம் ரூ.9,000 உதவித்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

4

பிரதமர் பதவிக்கு OK சொன்ன சோனிய காந்தி.. கோபத்தில் ராகுல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை

5

கள்ளக்குறிச்சி மக்களுக்கு குட்நியூஸ்! தரம் உயரும் அரசு மருத்துவமனை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil News LIVE Updates : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை, அர்னாப் புயலால் ஆந்திராவில் 5 பேர் பலி, தமிழகத்திற்கு அடுத்து மழை எப்போது? ஸ்பெயின் நாட்டில் நடந்த கோர விபத்தில் 68 பேர் பலி..மேலும் இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.