• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தொடர் பவர்கட்... காரணம் என்ன...? இனி நோ பிரச்னை - தமிழ்நாடு அரசு விளக்கம்

தொடர் பவர்கட்... காரணம் என்ன...? இனி நோ பிரச்னை - தமிழ்நாடு அரசு விளக்கம்

நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Written BySudharsan G
Published: Sep 12, 2026, 20:03 IST|Updated: Sep 12, 2026, 20:16 IST
joinshare
தொடர் பவர்கட்... காரணம் என்ன...? இனி நோ பிரச்னை - தமிழ்நாடு அரசு விளக்கம்
Image Credit: TN Government Explanation on Power Cut | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

2

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

3

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

4

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

5

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மின்வெட்டு பிரச்னை நிலவி வருகிறது. இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

குவியும் புகார்களுக்கு தமிழ்நாடு மின் விநியோகம் மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) தொடர்ச்சியாக பதிலளித்து வருகிறது. இதுகுறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆளும் தவெக அரசை சாடிய அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

அந்த பதிவில், "தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்" என மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க | வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிடாத மாநிலங்கள்: தமிழகத்திற்கு முதலிடம் - ADR அறிக்கை

நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச்… pic.twitter.com/Qjpr0BQevV

— Udhay (@Udhaystalin) September 12, 2026

மேலும், மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் தவெக அரசு திண்டாடுவதாக குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை'ப்யூஸ் போன அரசு' என சாடி உள்ளார். அதேநேரத்தில், தவெக அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

முன்னதாக மின்வெட்டு குறித்து எழுந்த புகாரின் மீது X தளத்திலேயே பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. நேற்று (செப். 11) மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது" என தெரிவித்திருந்தார்.

காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.

நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. 

நேற்று மாலை முதல் அனைத்து… https://t.co/915GqurIoq

— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) September 12, 2026

தொடர்ந்து அப்பதிவில், "நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர் மின்வெட்டு - அரசு சொல்லும் காரணம்

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் நீடித்த தொடர் மின்வெட்டு குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், "இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | இன்னும் பென்ஷன் வரலையா... டென்ஷன் ஆக வேண்டாம்... தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

அதேவேளையில், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன" என குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம்...

இதனால், தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் தற்போது மின் தொகுப்பின் (Grid) நிலைமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் – சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |@imrajmohan | pic.twitter.com/PEzm2WJty0

— TN DIPR (@TNDIPRNEWS) September 12, 2026

தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள்

  • மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது.
  • மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
  • மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகார் அளிக்க எண் அறிவிப்பு

மக்களுக்கு நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது என உறுதிப்பட தெரிவித்துள்ளது.

மேலும், மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான மின்னகம் அலுவலகத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | செவிலியர் காலிப் பணியிடங்கள் 4,724 - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu