SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இடைத்தேர்தலில் அதிக பணம் கொடுப்பது தவெக... சிபிஎம் சண்முகம் தடாலடி

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு மற்ற கட்சிகளை விட அதிகமாக பணம் வழங்குவது தவெகதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Written By Sudharsan G
Published: Oct 01, 2026, 04:20 PM IST | Updated: Oct 01, 2026, 04:24 PM IST
Join

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எஸ்.யு.சி.ஐ (சி) ஆகிய கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "தேர்தல் ஆணையத்தின் உடையே இரண்டு ஆணையர்கள் தேர்தல் ஆணையத்தில் எவ்வளவு பெரிய மோசடிகள் நடைபெற்றிருக்கிறது.

ஆளுங்கட்சியினுடைய எடுப்பார் கைப்பிள்ளையாக தேர்தல் ஆணையம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது. The Indian Express பத்திரிகை அதை விரிவாகச் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க | கட்டணமில்லா பேருந்து திட்டம்: நாளை முதல்... இந்த பஸ்களில் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்!

தேர்தல் ஆணையத்தின் கடமை

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலமாக தேர்தல் ஆணையத்தினுடைய வேலை என்பது தகுதி வாய்ந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதும், அனைவரும் சுதந்திரமான முறையில் வாக்களிப்பதை உத்தரவாதப்படுத்துவதும் நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்துவதும்தான் தேர்தல் ஆணையத்தின் கடமை" என்றார்.

தவெகவே அதிக பணம் கொடுக்கிறது

இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், "இடைத்தேர்தலில் எங்களுக்கு ஏன் வாக்களிக்க என்பதற்கு வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்குவோம். அப்போது மற்ற கட்சியினர் பணம் கொடுக்கிறார்கள், நீங்கள் மட்டும் நோட்டீஸ் கொடுக்கிறீர்கள் என மக்கள் கேட்கிறார்கள்.

 

யாரெல்லாம் பணம் கொடுத்தார்கள் என கேட்டபோது, வாக்காளர்களுக்கு மற்ற கட்சிகளை விட அதிகமாக பணம் வழங்குவது தவெகதான். தவெக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.

தூயசக்தி என்ற சொல்லி பணம் கொடுக்காமல் கடந்த தேர்தலை சந்தித்தது தவெக. இப்போதும் முதலமைச்சர் விஜய் அதையே சொல்கிறார். ஆனால் மக்கள் சொல்வது வேறாக உள்ளது.

மேலும் படிக்க | தோல்வி பயத்தில் முதல்வர் விஜய் ஏதேதோ உளறுகிறார்: டிடிவி தினகரன்

ஆளுங்கட்சியில் சேர்ந்தால் தான்...

முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே, ஆளுங்கட்சியில் சேர்ந்தால்தான் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தை முதலமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா என விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.

அமைச்சரவையில் சௌமியா அன்புமணி?

தொடர்ந்து, சௌமியா அன்புமணி அமைச்சரவையில் இடம்பெறப்போகிறார் என தகவல் வெளியாகியிருப்பது குறித்த கேள்விக்கு, "சம்பந்தப்பட்ட திருமாவளவன், சௌமியா அன்புமணி ஆகியோரே இதை வதந்தி என மறுத்துள்ளதால், நாங்களும் வதந்தி என்றே நம்புகிறோம்" என்றார்.

தவெகவை பொருத்தவரை எந்தவொரு பிரச்னையிலும் அவர்களிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அதையே பாமக விஷயத்திலும் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் பெ. சண்முகம் தெரிவித்தார்.

மேலும் படிக்க |  சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: ஒரே மாதத்தில் இரட்டிப்பான தொற்று எண்ணிக்கை

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES