விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் என முதலமைச்சர் விஜய்யை நோக்கி, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் இன்று காலை போட்ட X பதிவில், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தவெக அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று அமைச்சர்கள் கூறியதாகவும்; ஆனால், இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது, இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM? முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள். இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்? இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள். காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்? இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
— Udhay (@Udhaystalin) November 5, 2026
இந்த அரசின் மௌனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிப்பதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது என்றும்; அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்? என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், திமுக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த அரசு ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் தற்போது பருவமழை மாற்றங்கள், பாசன நீர் பற்றாக்குறை, சாகுபடிச் செலவு அதிகரிப்பு, விளைபொருட்களுக்கான உரிய வேலை கிடைக்காதது என பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணை நீர் திறப்பு தாமதம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபாடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறுவை சாகுபடிப் பரப்பு பெருமளவில் சரிந்துள்ளது.
இதற்கிடையே, விவசாயக் கடன் சுமை, பயிர் இழப்புக்கான இழப்பீடு, கொள்முதல் தொடர்பான சிக்கல்கள் ஆகியவையும் விவசாயிகளின் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கின்றன. எனவே, உரிய நேரத்தில் பாசன நீர், நியாயமான கொள்முதல் விலை, பயிர்காப்பீடு மற்றும் முழுமையான நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கும்.