SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆதாரமே கிடைக்கவில்லை... வண்டலூர் மாணவி விவகாரம்... காவல்துறை சொல்லும் விளக்கம்

வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திலேயே 10ஆம் வகுப்பு மாணவி பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், தாம்பரம் மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Written By Sudharsan G
Published: Sep 25, 2026, 13:56 IST | Updated: Sep 25, 2026, 14:05 IST
Image Credit: Tambaram Police Statement on Vandalur Harassment Case | Image Source : X
Join

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திலேயே 10ஆம் வகுப்பு மாணவி பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், தாம்பரம் மாநகர காவல்துறை அதன் X தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "செப்டம்பர் 24ஆம் தேதி அன்று தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாக கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது.

மேலும் படிக்க | ரீல்ஸை பார்த்து 118 பவுன் கொள்ளை! பணக்குவியலை பதிவிட்ட பெண் வீட்டில் கைவரிசை..

தொடர்புடைய ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டன...

புகார் கிடைத்த உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு கவனமாக சரிபார்க்கப்பட்டன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன என்றும்; பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை

மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஜெம் வீரமணி வழக்கு: 4 பெண் அதிகாரிகள் அடங்கிய SIT அமைப்பு - யார் யார்?

விசாரணை தொடரும்

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், இந்த தகவல்களை கருத்தில் கொண்டு, குழந்தையின் நலன் கருதி, சரிபார்க்கப்படாத தகவல்களைப் வெளியிட வேண்டாம் என தாம்பரம் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தவெக ஆட்சியை சாடிய கனிமொழி

தூத்துக்குடி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில், "வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே 10ஆம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, மூச்சடைக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகி உள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இன்று முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் வருகிறார் என்பதற்காக, இந்த சம்பவத்தை பொய் செய்தி எனக் கூறி, மூடி மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை இந்த தவெக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

"பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதைவிட முதலமைச்சரின் வருகைக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதுதான் காவல்துறையின் முன்னுரிமை என்றால், உண்மையில் இது யாருக்கான ஆட்சி?. எப்படி அந்த சிறுமிக்கு நீதி கிடைக்கும்?" என்றும் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

சாமானிய மக்களுக்கு தனி சட்டமா...?

அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது X பக்கத்தில், "அரசுப்பள்ளி பாதுகாப்பற்ற இடமாக மாறி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதை உங்கள் காவல்துறை விசாரிப்பதை விட்டுவிட்டு, செய்தி வந்த மறுகணமே பொய் செய்தி (False News) என்று முந்திக்கொண்டு வந்து நிற்பது வெட்கக்கேடான செயல்" என கடுமையாக சாடி உள்ளார். High Profile Cases என்றால் ஒரு சட்டம் என்றும்; சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க | ஜெம் வீரமணி வழக்கு: யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை... ஸ்டாலின் சொன்ன விளக்கம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES