Tamil News LIVE: தீவிரமடையும் ’அக்வான் புயல்’.. 2027 ஐபிஎல் தக்கவைப்பு பட்டியல் - இன்றைய முக்கிய அப்டேட்!
வங்கக்கடலில் உர்வான அக்வான் புயல் இன்று தீவிர புயலாக உருவாக்கக்கூடும். 2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியல் இன்று வெளியாகும். இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் செய்திகளுடன் இணைந்திருங்கள்!
வங்கக்கடலில் ‘அக்வான் புயல்’ திங்கள்கிழமை மாலையில் உருவானது. இது தீவிர புயலாக வலுப்பெற்று நவம்பர் 20 ஆம் தேதி ஆந்திரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இன்று தீவிர புயலாக உருவாக்கூடும். இதனால் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியல் இன்று வெளியாகிறது. அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்கும் நோக்கில் பட்டியல் வெளியிடும். ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், 4 பேர் உயிரிந்துள்ளனர். தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 99,760க்கு வந்துள்ளது. நீண்ட மாதங்களுக்கு பின்னர் தங்கம் ரூ. 1 லட்சத்திற்கு கீழ் சரிந்துள்ளது.
17 Nov 2026 15:13 IST
Jobs Update: NLC நிறுவனத்தில் வேலை
NCL இந்தியா நிறுவனம், துணைப் பொது மேலாளர் (Deputy General Manager), நிர்வாகப் பொறியாளர் (Executive Engineer) மற்றும் உதவி நிர்வாக மேலாளர் (Assistant Executive Manager) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் மொத்தம் 145 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்... (மேலும் படிக்க)
17 Nov 2026 13:44 IST
Nvidia Controversy: மீண்டும் ஜென்சன் ஹுவாங்?
சர்ச்சையில் சிக்கியுள்ள என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, "ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்கவில்லை" என தெரிவித்துள்ளதாக சிஎன்பிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஹுவாங்கின் நடத்தை குறித்த விசாரணையில் இயக்குநர்கள் குழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)
17 Nov 2026 13:07 IST
Retirement Planning Tamil: அதிக வட்டி தரும் 5 சிறந்த சேமிப்பு திட்டங்கள்
ஓய்வூதிய வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க விரும்புகிறீர்களா? SCSS முதல் Mutual Fund SWP வரை, மாதாந்திர வருமானம் தரக்கூடிய 5 சிறந்த முதலீட்டு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பாதுகாப்பான சேமிப்பு, அதிக வட்டி மற்றும் நிலையான வருமானம் பெற உதவும் அனைத்து விவரங்கள்... (மேலும் படிக்க)
17 Nov 2026 12:17 IST
Aadhav Arjuna Daisy Martin Split: வித்தியாசமான விவாகரத்து?
விவாகரத்து என்ற அறிவிப்பு வந்தவுடனேயே, நான்கு சுவருக்குள் அடங்கி இருந்த கோவமும் கவலையும், உணர்வுகளும் உணர்ச்சிகளும், அவதூறு, குற்றச்சாட்டு, ஜீவனாம்சம், கூறைகூறல் என பல்வேறு விதங்களில் பொதுவெளியில் பொங்கி வழிகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஆதவ் அர்ஜுனா-டெய்சி மார்டின் பிரிவு பற்றிய பதிவு முதிர்வின் சாயல் கொண்ட ஒரு அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா மீது எந்தவொரு குறையையும் கூறாமல், இருவரும் பரஸ்பரமாகப் பிரிய முடிவு செய்துள்ளதை அவரது மனைவி டெய்சி மார்டின் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். இது உண்மையில் முதிர்வுதானா? அல்லது, மோதல்களை மூடி மறைக்கும் முகமூடியா?.. (மேலும் படிக்க)
17 Nov 2026 11:40 IST
Indian Post Job: அஞ்சல் துறை வேலைவாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஞ்சல் துறையில் உள்ள பணிக்கு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது (மேலும் படிக்க)
17 Nov 2026 11:22 IST
சிஎஸ்கே விடுவிப்பு, தக்கவைப்பு உத்தேச பட்டியல்!
ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியல் இன்று வெளியாக உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14.20 கோடிக்கு வாங்கிய பிரசாந்த் வீர் உள்ளிட்ட முக்கிய வீரர்களை விடுவித்து ஏலத்திற்கான தொகையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)
17 Nov 2026 10:35 IST
8th Pay Commission Update: பணிக்கொடை விதிகளில் மாற்றம் வருமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இது ஒரு முக்கியமான தருனம். இன்னும் சில மாதங்களில் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வெளியாகும். அதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு அவர்களது மொத்த சம்பள அமைப்பிலும் மாற்றம் இருக்கும் என நம்பப்படுகின்றது. ஊழியர்களுக்கு அளிக்கப்படும் நிதி நன்மைகளில் முக்கியமான் ஒன்றாக இருக்கும் பணிக்கொடையிலும் மாற்றங்கல் எதிர்பார்க்கப்படுகின்றன... (மேலும் படிக்க)
17 Nov 2026 10:18 IST
Gingee Girl Missing News : செஞ்சி சிறுமி குறித்த முக்கிய அப்டேட்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மர்மம் நீடிக்கிறது. சிறுமியை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
17 Nov 2026 10:16 IST
Akwan Cyclone News: அக்வான் புயல் அப்டேட்
அக்வான் புயல் நவம்பர் 17-ஆம் தேதி மாலைக்குள் தீவிர சூறாவளியாகவும், நவம்பர் 19-ஆம் தேதி காலை வாக்கில் மிகத் தீவிர சூறாவளியாகவும் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
17 Nov 2026 10:00 IST
சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷன்!
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அனுப்பிவிட்டு, அவருக்கு பதிலாக தலா ரூ. 18 கோடி மதிப்பில் இஷான் கிஷனை டிரேடிங் மூலம் அணியில் எடுக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)
17 Nov 2026 09:58 IST
உத்தரகாண்டில் விபத்து: 4 பேர் பலி!
ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். (மேலும் படிக்க)
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்த் அளித்த தகவலின் பேரில், கபாலீஸ்வரர் மலை மற்றும் மாடக்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எஞ்சிய 6.2 கிலோ தங்க நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். (மேலும் படிக்க)
17 Nov 2026 09:54 IST
இன்றைய ராசிபலன்!
இன்று (நவம்பர் 17, 2026) செவ்வாய்க்கிழமை கார்த்திகை 01 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம். (மேலும் படிக்க)
நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.