SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE : அர்னாப் புயலால் 5 பேர் மரணம், கே.என்.நேரு வீட்டில் சோதனை, ஸ்பெயின் ரயில் விபத்து-முக்கிய செய்திகள்

Tamil News LIVE Updates : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? மாநிலத்தை தாண்டி தேசியம் மற்றும் உலகளவில் என்ன நடக்கிறது? இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 29, 2026, 09:17 AM IST | Updated: Oct 29, 2026, 11:37 AM IST
Join

Tamil News LIVE Updates : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை, அர்னாப் புயலால் ஆந்திராவில் 5 பேர் பலி, தமிழகத்திற்கு அடுத்து மழை எப்போது? ஸ்பெயின் நாட்டில் நடந்த கோர விபத்தில் 68 பேர் பலி..மேலும் இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

29 Oct 2026, 11:35 AM

Tamil Nadu Judicial Exam Rules Changed: தமிழகத்தில் நீதிபதிகள் தேர்வில் அதிரடி மாற்றம்

மாவட்ட நீதிபதி, சிவில் நீதிபதி நேரடி நியமன விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் (மேலும் படிக்க)
 

29 Oct 2026, 11:32 AM

Tamil Nadu Free Bus Travel for Disabled Persons: மாற்றுத்திறனாளிகளுக்கு இனி 100% இலவச பயணம்

Tamil Nadu Free Bus Travel for Disabled Persons: மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் அதிரடி பரிசாக எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இனி 100% இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

29 Oct 2026, 11:10 AM

ISRO | விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எப் 18 ராக்கெட்!

ஆந்திர மாநில, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஹ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளைஇ இரவு 11.51 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி - எப் 18 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது; இதில் வழிகாட்டுதல் சேவைகளுக்காக என்.வி.எஸ் -03 செயற்கை கோள் பயணிக்க இருக்கிறது.

29 Oct 2026, 10:51 AM

PM Kisan Update: பயனாளி பட்டியலில் பெயர் உள்ளதா?

இந்த முறை அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் 24வது தவணையான (PM Kisan 24th Installment) ₹2,000 கணக்கிற்கு வருமா என்பது கேள்விக்குறிதான். பல்வேறு காரணங்களுக்காக சில விவசாயிகளின் பெயர்கள் பயனாளி பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவணைத் தொகை தங்கள் கணக்கிற்கு வந்து சேருமா அல்லது பெயர் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதா என்ப்தை முதலில் விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும்... (மேலும் படிக்க)

29 Oct 2026, 10:38 AM

Weather Report | தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்!

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; அடுத்த 24 மணி நேரத்தில், தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 Oct 2026, 9:50 AM

MK Stalin | பொருளாதார நிபுணர் கைது..மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பொருளாதார நிபுணரான கலையரசன் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டாரா என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

29 Oct 2026, 9:37 AM

EPS Pension Update: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா?

தற்போது ₹1,000 ஆக உள்ள குறைந்தபட்ச EPS (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. நவம்பர் 19 அன்று நடைபெறவுள்ள CBT கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படலாம் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன... (மேலும் படிக்க)
 

29 Oct 2026, 9:34 AM

TN Cabinet Meeting: முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஆக்டோபர் 29), வியாழக்கிழமை அன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தவெக ஆட்சியின் மூன்றாவது மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது... (மேலும் படிக்க)

29 Oct 2026, 9:23 AM

Cancer Medicines Prices | புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு!

மத்திய அரசு, 500க்கும் மேற்பட்ட புற்றுநோய் மருந்துகளின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

29 Oct 2026, 9:21 AM

Minister Keerthana | குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்!

தமிழ்நாட்டின் மாநில தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா, தன்னைப்பற்றி வலம் வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

29 Oct 2026, 9:19 AM

KN Nehru | கே.என்.நேரு வீட்டில் சோதனை!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டின் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில் இந்த சோதனை நடைப்பெற்று வருகிறது. இதனால் அவரது வீட்டிற்கு வெளியே திமுகவினர் குவிந்துள்ளனர்.

29 Oct 2026, 9:18 AM

Arnab Cyclone | அர்னாப் புயலுக்கு 5 பேர் பலி

அர்னாப் புயல், ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்த நிலையில் இதற்கு 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு அடுத்து எப்போது மழை என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES