/Tamil News LIVE: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்.. 36 மணி நேரத்தில் உருவாகிறது அக்வான் புயல்!
Live Now
Tamil News LIVE: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்.. 36 மணி நேரத்தில் உருவாகிறது அக்வான் புயல்!
Tamil News LIVE Updates: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகிறது அக்வான் புயல். இதுபோன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் செய்தியுடன் இணைந்திருங்கள்!
திருச்செந்தூர் சூரசம்ஹாம் நிகழ்வில் கஜமுகம், சிங்க முகத்தில் வந்த சூரனை முருகன் வதம் செய்தார். தொடர்ந்து சுயரூபத்தில் வந்த சூரனையும் முருக பகவான் வதம் செய்தார்.
15 Nov 2026 15:40 IST
IND vs NZ: தொடரை வென்ற இந்திய அணி
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது ஓடிஐ போட்டி இன்று நடைபெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. (மேலும் படிக்க)
A series victory to savour 🥳 #TeamIndia clinch a thriller at the Bay Oval to take the #NZvIND ODI series 3️⃣-1️⃣ 👏 Scorecard ▶️ https://t.co/wqxhoXb2WC https://t.co/aAwPMyBykt
தமிழ்நாட்டின் சில முக்கிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் தடை இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
15 Nov 2026 12:05 IST
Chennai District Jobs : சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு
Chennai District Jobs : சென்னை மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (மேலும் படிக்க)
15 Nov 2026 09:59 IST
MI - CSK டீல்? துபேவுக்கு பதில் இந்த 2 வீரர்கள்…
முன்னதாக சிஎஸ்கே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் வீரர்கள் பரிமாற்றம் மேற்கொண்ட நிலையில், தற்போது குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
15 Nov 2026 09:58 IST
அக்வான் புயல் எங்கு கரையை கடக்கும்?
வங்கக்கடலில் உருவாகி வரும் 'அக்வான்' புயல் வரும் நவம்பர் 19 அல்லது 20-ஆம் தேதி எண்ணூர் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் நகர்வைப் பொறுத்து சென்னை உள்ளிட்ட வட தமிழகத்திற்கு கனமழை கிடைக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். (மேலும் படிக்க)
15 Nov 2026 09:43 IST
Tamil Nadu Ration Shop Jobs : ரேஷன் கடைகளில் 1,890 காலிப்பணியிடங்கள்
Tamil Nadu Ration Shop Jobs : தமிழக ரேஷன் கடைகளில் பணிபுரிய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வாய்ப்பு. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள முழு வழிகாட்டு நெறிமுறைகள் இங்கே விரிவாக பார்க்கலாம் (மேலும் படிக்க)
நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி வரும் 'அக்வான்' புயல் வரும் நவம்பர் 19 அல்லது 20ஆம் தேதி எண்ணூர் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் நகர்வை பொறுத்து சென்னை உள்ளிட்ட வட தமிழகத்திற்கு கனமழை கிடைக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நியூசிலாந்துக்கு- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு நவ.29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.